Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆராய்ச்சிகளில் மாணவர்களை ஊக்குவிக்காமல் இருந்தால் நாட்டிற்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும்,&'&' என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பேசினார்.


        "ஆராய்ச்சிக்காக அரசு ஒதுக்கும் நிதியில் வெறும் 50 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆராய்ச்சிகளில் மாணவர்களை ஊக்குவிக்காமல் இருந்தால் நாட்டிற்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும்,&'&' என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பேசினார்.

         கோவை கிருஷ்ணா கல்வி குழுமங்களின் சார்பில் "நாட்டின் வளர்ச்சியும் தொழில்நுட்ப சவால்களும்" எனும் சிறப்பு தலைமைப் பண்பு தொடர் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி தலைமை வகித்தார்.

           "இஸ்ரோ" முன்னாள் தலைவர் மாதவன் நாயர் பேசியதாவது: ஆர்வமும் ஈடுபாடும் இருந்தால் வெற்றி எளிதானது. தொழில்நுட்பத்தின் உதவியால் நமது வாழ்கை தரம் மேம்பட்டுள்ளது. வானியல் ஆராய்ச்சியில் முன்னிலையில் இருக்கும் ஆறு நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. சிறந்த விஞ்ஞானிகள் நம்மிடம் உள்ளனர். பூமியை தவிர பிற கோள்களில் மனிதர்கள் வாழ முடியுமா என்ற நோக்கில், தொழில்நுட்ப உதவியுடன் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. நல்ல தரமான கல்வியே வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இன்று பள்ளிகள் வெறும் பெயரளவில் நடத்தப்படுகிறது. போதிய வசதிகள் இருப்பதில்லை. தேர்வின் நோக்கம் மதிப்பெண்ணாக மட்டுமே உள்ளது. இதனால் மாணவர்கள் போதிய திறன் இல்லாமல் பட்டங்களை பெறுகின்றனர்.

         இதனை கட்டாயம் மாற்ற வேண்டும். மாணவர்கள் விஷயங்களை பகுத்தறிவதன் மூலம், அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும். இஸ்ரோ சார்பில், ஆராய்ச்சிக்காக கல்வி நிறுவனங்களுக்கு ஒதுக்கும் நிதியில், வெறும் 20 முதல் 30 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆராய்ச்சிக்காக அரசு ஒதுக்கும் நிதியில், வெறும் 50 சதவீதமே பயன்படுத்தப்படுகிறது. ஆசிரியர்களும் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது அவசியம். ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்குவிக்காவிட்டால், நாட்டிற்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும். இவ்வாறு, மாதவன் நாயர் பேசினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive