மார்ச் 1ம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் துவங்குகின்றன. மின்வெட்டை சமாளிக்க,
தேர்வு மையங்களில், ஜெனரேட்டர் உபயோகத்திற்கான நிதி கேட்டு, முதன்மைக்
கல்வி அலுவலர்கள், அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், "அரசின் உத்தரவுப்படி, 10ம்
வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கு, ஜெனரேட்டர்களை தயார் நிலையில்
வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கிராமப்புற மையங்களுக்கு ஜெனரேட்டர் எடுத்துச் செல்வதால், கூடுதல்
செலவாகும். பள்ளிக்கல்வித் துறையில் இருந்து நிதி வர தாமதமாகும்
பட்சத்தில், பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியை பயன்படுத்த அனுமதி
கேட்டுள்ளோம்" என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...