"தமிழகத்தில் உள்ள, அனைத்து அரசு பள்ளிகளிலும், கட்டாய கல்வி
சட்டத்தில் உள்ளபடி, அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்" என,
கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கலந்துரையாடல் நிகழ்ச்சியில், எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் நடந்தது. இதில் கல்வியாளர்கள் கூறியதாவது:
ராஜகோபால் - கல்வியாளர்: தமிழகத்தில், கல்வி உரிமை
சட்டத்தின் படி, அனைத்தும் சட்டபூர்வமாக நடக்கிறதா என்பதை, அனைவரும் ஒன்று
சேர்ந்து கண்காணிக்க வேண்டும். சட்டத்தின் படி, பள்ளிகளில் அடிப்படை
வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறதா என்பதை அறிய தனிக்குழு அமைக்க
வேண்டும்.
அவ்வாறு குழந்தை கல்வியின் மீது ஆர்வம் கொண்டிருப்பவர்களை ஒருங்கிணைத்து
செயல்பட்டால், எந்தெந்த பள்ளிகளில் என்னென்ன அடிப்படை வசதிகள், பூர்த்தி
செய்யப்படவில்லை என்பதை அறிய முடியும். அரசும், எந்தெந்த பள்ளிகளில்
அடிப்படை வசதிகள் இல்லை என்பதை அறிந்து, வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
நாராயணன் - ஆசிரியர், பாடம் இதழ்: தமிழகத்தில் உள்ள
சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில், அடிப்படை வசதிகள் இல்லாததாலும்,
காப்பாளர்கள் சரி வர செயல்படாததாலும், அங்கு சேரும் குழந்தைகள் மேலும்,
குற்றவாளிகளாக மாறுகின்றனர்.
குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில், பல்வேறு பணியிடங்கள் காலியாக
இருப்பதால், குழந்தைகளின் முன்னேற்றத்தில் அவர்களால் கவனம் செலுத்த
முடியவில்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...