அண்ணா பல்கலை, இந்த கல்வியாண்டுக்கான "தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு(டான்செட்)" தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கல்வித் தகுதி: எம்.பி.ஏ., படிப்பிற்கு,
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில், பிளஸ் 2விற்கு பின், மூன்றாண்டு பட்டப்
படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எம்.சி.ஏ., படிப்பிற்கு, பிளஸ் 2, பட்டப் படிப்பில் கணிதத்தை ஒரு பாடமாக
பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மற்ற படிப்புகளுக்கு சம்பந்தப்பட்ட படிப்புகளில் 50 சதவீத
மதிப்பெண்களோடு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வகுப்பு வாரி
அடிப்படையில், 5 சதவீத மதிப்பெண்கள் தளர்வு உண்டு. மேலும் கல்வித்தகுதிகள்
பற்றி அறிய http://www.annauniv.edu/tancet2013/eligibility.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.
அனைத்து படிப்புகளுக்கும் விண்ணப்பக்கட்டணமாக (எஸ்.சி/எஸ்.டி., 250,
மற்றவர் 500 ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட
படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள், தனித்தனியே விண்ணப்பிக்க
வேண்டும். தற்போது இறுதியாண்டு படித்துக்கொண்டிருப்பவர்களும்
விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ளவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ்களின் நகல்,
டிடி போன்றவற்றுடன் பல்கலையின் ரிஜிஸ்ட்ரேஷன் மையத்திற்கு பிப்.,26க்குள்
நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது http://www.annauniv.edu/tancet2013/
என்ற பல்கலை இணையதள முகவரியில் உள்ள படிவத்தை டவுண்லோடு செய்து, பூர்த்தி
செய்த படிவத்தை பிரின்ட் அவுட் செய்து, டிடி மற்றும் கல்விச் சான்றுகளின்
நகல்களை இணைத்து, பல்கலை முகவரிக்கு பிப்.,28க்குள் கிடைக்குமாறு அனுப்ப
வேண்டும்.
எம்.பி.ஏ., படிப்பிற்கு ஏப்., 06 அன்று காலையும், எம்.சி.ஏ.,
படிப்பிற்கு ஏப்., 06 அன்று மாலையும், மற்ற படிப்புகளுக்கு ஏப்.,07 அன்று
காலையும் தேர்வு நடைபெறும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...