"நிர்வாக ஒதுக்கீட்டில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கும்,
வங்கிகள், கல்விக்கடன் வழங்க வேண்டும்" என, மதுரை ஐகோர்ட் கிளை
உத்தரவிட்டது.
நீதிபதி கே.கே.சசிதரன் முன், மனு விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர்
வக்கீல் மாரிமுத்து ஆஜரானார். வங்கி தரப்பில், "நிர்வாக ஒதுக்கீட்டில்
கல்விக்கடன் வழங்க முடியாது. மனுதாரர், வேறு திட்டத்தில் கடன் பெற, கூடுதல்
சொத்துப் பிணையம் தாக்கல் செய்யவில்லை" என தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி உத்தரவு: மத்திய நிதி அமைச்சர் தலைமையில் 2012
ஆக., 18 ல் நடந்த கூட்டத்தில், பொதுத்துறை வங்கிகளின் தலைமை அதிகாரிகள்
பங்கேற்றனர். இதில், கல்விக்கடன் வழங்குவது பற்றிய, புது திட்டம்
வகுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வியை தொடரும் மாணவர்கள், நிர்வாக ஒதுக்கீட்டில்
சேர்ந்தாலும், கல்விக்கடன் வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்விக்கடன் பெறுவதற்கான தகுதி, நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது. மனுதாரர்,
கல்விக்கடன் பெற தகுதி பெற்றுள்ளார். வங்கி, மனுதாரரின் விண்ணப்பத்தை
பரிசீலித்து, கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...