"இந்தியா-பிரிட்டன் நாடுகளுக்கு இடையே, சிறப்பான ஒரு உறவை ஏற்படுத்த
வேண்டும் என, விரும்புகிறேன். இந்த உறவு, கடந்த காலத்தை பற்றியதாக
அல்லாமல், எதிர்காலத்தை பற்றியதாக இருக்கும்" என, பிரிட்டன் பிரதமர்,
டேவிட் கேமரூன், நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இங்குள்ள பல்வேறுவிதமான வளங்கள், பொருளாதார வளர்ச்சிக்கு, மிகப் பெரிய
ஊக்க சக்தியாக திகழ்கின்றன. பிரிட்டனுக்கும், இந்தியாவுக்கும் இடையே,
சிறப்பான உறவு ஏற்பட வேண்டும் என்பதே, என் நோக்கம். இந்த உறவு, கடந்த
காலத்தை பற்றியதாக அல்லாமல், எதிர்காலத்தை பற்றியதாக இருக்கும்; அந்த
உறவுக்கு, வானம் தான் எல்லை.
இந்தியாவுடன், நீடித்த உறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, இங்கு
வந்துள்ளேன். இந்தியாவைச் சேர்ந்த வர்த்தக பிரமுகர்கள், மாணவர்கள்,
பிரிட்டனுக்கு வருவதற்கு, விசா பெறுவதில், சிக்கல் உள்ளதாக புகார்கள்
கூறப்பட்டுள்ளன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இனி, பிரிட்டனுக்கு வரும் முதலீட்டாளர்களுக்கு, ஒரே நாளில் விசா
அளிக்கப்படும். அதே போல், இந்தியாவிலிருந்து, படிப்பதற்காக பிரிட்டன் வரும்
மாணவர்களுக்கு, கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். எத்தனை மாணவர்கள்
வேண்டுமானாலும், பிரிட்டனுக்கு வந்து, பல்கலைகளில் படிக்கலாம்.
அவர்களுக்கான விசா காலம் முடிந்தாலும், உடனடியாக விசா நீட்டிப்பு
வழங்கப்படும்.
இவ்வாறு, டேவிட் கேமரூன் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...