மாணவர்களின் அறிவுவளர்ச்சியை ஊக்குவிக்க ஒலி அலைகளைப் பயன்படுத்தும்
(PHONEMIC INTELLIGENCE) என்ற புதிய முறையை கண்டறிந்துள்ளதாக திரிபுரா
ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 10ம் தேதி) நடைப்பெற்ற கூட்டம்
ஒன்றில் இந்த அமைப்பின் நிறுவனர் பாஸ்கரன் பிள்ளை என்பவர் அது குறித்து
விளக்கினர்.
சிவ சூத்ரா என்ற இந்திய முறையை அடிப்படையாக கொண்டு PHONEMIC
INTELLIGENCE முறை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், ஒருவித ஒலி அதிர்வுகளை
உருவாக்குவதன் மூலம் மனித மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்வதே இதன்
அடிப்படை என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் மாணவர்களின், கற்கும் திறன், மன அமைதி, ஆளுமைத்திறன்
அதிகரிப்பது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளதாகவும் பாஸ்கரன் பிள்ளை கூறினார்.
சுமார் இரண்டாயிரத்து 450 மாணவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது
உறுதிபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...