அரசு பொறியியல் கல்லூரிகளில், 152 உதவி பேராசிரியர் மற்றும்
பாலிடெக்னிக் கல்லூரிகளில், 139 விரிவுரையாளர்கள் பணி நியமனம், 4
மாதங்களாக, இழுபறியில் உள்ளது. தேர்வு பெற்றவர்கள், எப்போது வேலை
கிடைக்கும் என, தெரியாமல் தவித்து வருகின்றனர்.
இதேபோல், அரசு பொறியியல் கல்லூரிகளில், 152 உதவி பேராசிரியர்களை நியமனம்
செய்வதற்கான தேர்வு, கடந்த ஆண்டு ஏப்ரல், 22ல் நடந்தது. சான்றிதழ்
சரிபார்ப்பிற்குப் பின், அக்டோபர், 18ல், தேர்வுப் பட்டியல் வெளியானது. இரு
தேர்வுகளிலும், தேர்வு பெற்ற தேர்வர்களின் விவரங்களை,
உயர்கல்வித்துறைக்கு, டி.ஆர்.பி., அனுப்பியது.
எனினும், 4 மாதங்களாக, இவர்களுக்கு பணி நியமனம் வழங்க, உயர்கல்வித்துறை
நடவடிக்கை எடுக்கவில்லை. வரும் கல்வி ஆண்டு துவங்குவதற்குள், அனைவரையும்
பணி நியமனம் செய்ய, உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேர்வு
பெற்றவர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...