கடந்த இரண்டு ஆண்டில் வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் காலக் கெடுவிற்குள் புதுப்பிக்க தவறியவர்கள் வரும் 28ம்
தேதிக்குள் ஆன்லைன் மூலம் புதுப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு
அதிகாரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும்
ஆன்லைன் வழியாக ஒருங்கிணைக்கப்பட்டு www.tnvelaivaaippu.gov.inஎன்ற
இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் புதிய மனுதாரர்கள்
கல்வித்தகுதி, பதிவு புதுப்பித்தல், கூடுதல் கல்வித்தகுதி பதிவு போன்ற
பணிகளை ஆன்லைன் வழியாக பதிவு செய்து கொள்ளலாம். இதனால் போக்குவரத்து செலவு,
காலவிரயம், அலைச்சல் மற்றும் பிற இன்னல்கள் தவிர்கப்படுகிறது.
ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஆகஸ்ட் 2011 முதல் ஜனவரி 2013 முடியவுள்ள புதுப்பித்தல் காலக்கெடுவிற்குள் புதுப்பிக்க தவறிய மனுதாரர்கள் 28.2.2013க்குள் ஆன்லைன் மூலம் புதுப்பிக்கலாம். இந்த புதுப்பித்தலுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வரவோ அல்லது மனுச் செய்யவோ தேவையில்லை.
வீட்டில் உள்ள இணையதள வசதி உடைய கம்ப்யூட்டரிலோ அல்லது ஏதேனும் இண்டர்நெட் மையங்களிலோ சிறப்பு சலுகை அடிப்படையில் புதுப்பிக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...