கல்பாக்கம் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், முதல் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பம், வினியோகம் துவங்கியது.
கல்பாக்கத்தில், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின்
நிலையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், பாவினி அணுமின் திட்ட நிறுவனம் உட்பட,
அணுசக்தி தொடர்பான, பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இப்பள்ளிகளில், அணு மின் நிலைய ஊழியர்களின் குழந்தைகள் மட்டுமின்றி,
கல்பாக்கம் அருகில், 8 கி.மீ., தொலைவிற்குள் அமைந்துள்ள, கிராமத்தின்
குழந்தைகளும் அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போது, முதல் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம், அந்தந்தப்
பள்ளி அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. அடுத்த மாதம், 10ம் தேதி விண்ணப்பிக்க
இறுதி நாள்.
விண்ணப்பிக்கும் பெற்றோர், குழந்தையின் பிறப்பு சான்றிதழ், முகவரி
நிரூபணத்திற்கு குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ் ஆகியவற்றின்
சான்றளிக்கப்பட்ட நகலை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...