அரசு ஊழியர்களுக்கு ஊதிய மாற்றங்களை நிர்ணயம்
செய்ய மாநில அரசு மூலம் 6 வது ஊதியக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு
அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு சமச்சீர் ஊதிய உயர்வு அளிக்கப்படாமல்
பல்வேறு துறைசார்ந்த அரசு ஊழியர்களுக்கு 6 வது ஊதியக்குழுவால் ஊதியம்
பரிந்துரைசெய்யப்பட்டது.
இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. ஊதியக்குழுவின் ஊதிய முரண்பாடுகளை களைவதற்கு
அரசு மூலம் மூவர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவானது தனது அறிக்கையை கடந்த
ஆண்டு நவம்பர் மாதம் அரசிடம் சமர்பித்துள்ளது.அறிக்கை சமர்பித்து 3
மாதங்கள் ஆகியும் இவ்வறிக்கையினை வெளியிடாமல் அரசு காலதாமப்படுத்திவருவதால்
14 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் மத்தியில
அதிருப்தி நிலவிவருகிறது. ஆகவே அரசு ஊழியர்களின் அதிருப்திவிலக உடனடியாக
மூவர் குழு அறிக்கையினை அரசு வெளியிடவேண்டும். இவ்வாறு கிராம உதவியாளர்கள்
சங்கம் வலியுறுத்தியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...