இதுவரை உருது மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த, வட மாநில
முஸ்லிம்களின் முக்கியமான, தருல் உலூம் தியோபந்த் வக்ப் அமைப்பு, உத்தர
பிரதேசத்தில், ஆங்கில கல்வி முறை பள்ளி துவக்க அனுமதி கோரியுள்ளது.
இந்த அமைப்புகளின் தலைவர்கள் இடும் கட்டளை, அறிவுரைகளை, வட மாநில
முஸ்லிம்கள் மதித்து நடப்பர். உருது மொழி பள்ளிகளை துவக்கி, மத வழிபாட்டு
முறைகளையும், கொள்கைகளையும் மட்டுமே போதித்து வந்த இந்த அமைப்பு, இப்போது
முதல் முறையாக, ஆங்கிலத்திற்கு மாற உள்ளது.
உத்தர பிரதேசத்தில் ஆங்கில மொழி பள்ளி துவக்க, அனுமதி வழங்குமாறு,
முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு, இந்த அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. இந்த
கடிதத்தை, முதல்வருக்கு, சிறப்பு பிரதிநிதி மூலம் கொடுத்து அனுப்பியுள்ள,
இந்த அமைப்பின் தலைவர்கள் கூறியதாவது:
இஸ்லாம், ஆங்கிலத்திற்கு எதிரானது என்ற கருத்து, உலகம் முழுதும்
நிலவுகிறது. அதை தகர்க்கும் நோக்கில், எங்கள் அமைப்பின் சார்பில், முழுதும்
ஆங்கிலம் கற்பிக்கும், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., போன்ற கல்வி
திட்ட முறையில், பள்ளி துவக்க அனுமதி கேட்டுள்ளோம்.
பள்ளி துவக்க அனுமதி கிடைத்தால், இஸ்லாமிய மாணவர்களுக்கு ஆங்கிலத்திலேயே
பாடம் நடத்த தயாராக உள்ளோம். இதன் மூலம் எங்கள் மீது சுமத்தப்படும்,
"ஆங்கில எதிர்ப்பாளர்கள்" என்ற முத்திரையை அகற்ற விரும்புகிறோம். இவ்வாறு
அவர் கூறினார்.
அது போல், டில்லி, பிரகதி மைதானத்தில், கடந்த ஆண்டு நடந்த புத்தக
கண்காட்சியில், இது வரை இல்லாத வகையில், இஸ்லாம் குறித்த ஆங்கில நூல்களை
ஏராளமாக விற்பனை செய்த இந்த அமைப்பு, கொண்டு வந்திருந்த அனைத்து ஆங்கில
புத்தகங்களையும் விற்று திரும்பியது. வரும் காலங்களிலும், ஆங்கிலத்தில்
இஸ்லாம் நூல்களை எழுதவும், இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...