தனியார் பள்ளிகளின் ஒட்டுமொத்த தரத்தின் அடிப்படையில், "ஏ.பி.சி.டி" என,
நான்கு வரையான, கிரேடு அங்கீகாரம் வழங்கப்படும் என, தனியார் பள்ளிகளுக்கான
கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது.
ஒட்டுமொத்தத்தில், பள்ளிகள் பெறும் புள்ளிகள் அடிப்படையில், "கிரேடு"
வழங்கப்படும். அதன்படி, 76 புள்ளிகள் முதல், 100 வரை பெறும் பள்ளிகள், "ஏ"
கிரேடு, 51-75 வரையிலான புள்ளிகளைப் பெறும் பள்ளிகளுக்கு, "பி" கிரேடு,
26-50 வரை பெறும் பள்ளிகளுக்கு, "சி" கிரேடு மற்றும் 26 புள்ளிகளுக்கு கீழே
பெறும் பள்ளிகளுக்கு, "டி" கிரேடும் வழங்கப்படும் என, கட்டண நிர்ணயக் குழு
அறிவித்துள்ளது.
புதிய கட்டணங்களை நிர்ணயிக்க, தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்கும் போது,
மேற்கண்ட புள்ளி விவரங்களை, விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும் என,
அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக, கட்டண நிர்ணயக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...