இக்னோ பல்கலையில் இ-ஞான்கோஸ் கல்வி இணையதளத்தின் மூலம் 2000கும்
மேற்பட்ட பாட விளக்கங்களின் வீடியோ தொகுப்பை, ஆன்லைன் மூலம் இலவசமாக
படிக்கலாம் என பல்கலை மண்டல இயக்குனர் மோகனன் தெரிவித்தார்.
"ஆன்லைன்" மூலம் மாணவர்கள் இலவசமாக படிக்கலாம். அடுத்த மாதத்தில் "ஞான் வாணி" பண்பலை, மதுரை மண்டலத்தில் துவங்க உள்ளது. இதில் "டோல் ப்ரீ" எண் மூலம், மாணவர்கள், நிபுணர்களுடன் இலவசமாக கலந்துரையாடலாம்.
சென்னையில் ஹீரோ நிறுவனத்தின் மூலம் "மோட்டார் ரிப்பேரிங்" குறித்த சான்றிதழ் பயிற்சியில், 100 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் 20 பேர் டீலர்களாக உள்ளனர். படிக்காதவர்களையும், இம்மையத்தில் சேர்க்கும் வகையில், நிறைய சான்றிதழ் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம்.
மதுரை மண்டலத்தில் விரைவில் "மோட்டார் ரிப்பேரிங்" பயிற்சி துவக்கப்படும். விவசாயம், நீர் மேலாண்மை தொடர்பான சான்றிதழ் வகுப்புகளும் நடத்தப்பட உள்ளன, என்றார்.
பயிற்சி கையேட்டை, மதுரை காமராஜ் பல்கலை டீன் ராஜ்யகொடி வெளியிட்டார். மண்டல துணை இயக்குனர் கிஷோர் குமார், உதவி இயக்குனர் நம்பூதிரிபாட், உதவி பதிவாளர் விஜயகுமார் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...