இடப்பற்றாக்குறை உள்ள இடங்களில், மாடிகளில் அறைகள் கட்டப்பட்டன.
இப்பணிகள் அனைத்தும் பள்ளி கல்விக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில், கட்டுமான பொருட்களான மணல், சிமென்ட், இரும்பு கம்பிகள்,
பணியாளர்கள் சம்பளம் என, அனைத்தும் பல மடங்கு உயர்ந்துள்ளது. பல இடங்களில்
கட்டுமான பணிகள் நிறைவடைந்து, பூச்சு வேலைகள், மேல் தளத்தில் தட்டு ஓடு
பதிக்கும் பணிகள், எலக்ட்ரிக்கல், வண்ணம் தீட்டுதல் பணிகள், நிதியில்லாமல்
பாதியில் நிற்கின்றன.
பணியை நிறைவு செய்ய முடியாமல், பள்ளி கல்விக்குழுக்களும் தவித்து
வருகின்றன. பணிகளை முடித்து கொடுக்க, நிதி வழங்கும் படி, உள்ளாட்சி
அமைப்புகளை கெஞ்சுகின்றன. கட்டடம் பணி பாதியிலே நிற்பதால், பயன்பாட்டுக்கு
வராமலே சேதமடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலைக்கல்வி
திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், "புதிய வகுப்பறை கட்டடத்திற்கு ஒதுக்கீடு
செய்யப்பட்ட நிதி, பற்றாக்குறையாக உள்ளது. கூடுதல் நிதி அரசிடம்
கேட்கப்பட்டுள்ளது. வந்ததும் பணிகள் நிறைவு பெறும்,&'&' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...