Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு: புதிய முறையை எதிர்கொள்வது எப்படி?

 

          பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்களை, தேர்வு செய்வதற்கான அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) சமீபத்தில் வெளியிட்டது. இதில், நீண்ட நாட்களுக்குப் பிறகு தேர்வு முறையை டி.என்.பி.எஸ்.சி., மாற்றி அமைத்துள்ளது.
 
         வரும் பிப்.16ல் குரூப் 1 தேர்வுகளும், தொடர்ந்து பல்வேறு தேர்வுகளும் நடக்க உள்ளன. குரூப் 1 தேர்வு, இனி மாநில குடிமைப்பணி என அழைக்கப்படும். குரூப் 1 முதன்மை தேர்வில் தற்போது நான்கு தாள்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. குரூப் 2 தேர்விலிருந்த நகராட்சி ஆணையர், சார்பதிவாளர் போன்ற பணிகள், குரூப் 1 தேர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.

           குரூப் 2 தேர்வில் இருக்கும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகள், இதுவரை முதனிலைத் தேர்வு, நேர்முகத் தேர்வு வாயிலாக நிரப்பப்பட்டன. இப்பணிகள் இனி முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய கட்டங்களில் நிரப்பப்படும். (முதனிலைத் தேர்வு கொள்குறி வகையிலும், முதன்மைத் தேர்வு விரிவாக விடையளிக்கும் வகையிலும் அமையும்)

          வி.ஏ.ஓ., தேர்வுகளில் இனி கிராம நிர்வாகம், உள்ளாட்சித் துறை சார்ந்த வினாக்கள் இடம் பெறும். குரூப் 4 தேர்வுத் திட்டத்தில் மாற்றம் இல்லை. ஒட்டு மொத்தமாக எல்லா தேர்வுகளிலும், மனத்திறன் சம்பந்தப்பட்ட "ஆப்டிடியூட்&' வகை வினாக்கள் (புதிதாக), கட்டாயம் இடம் பெறும்.

           தயாராவது எப்படி?: கடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளில் "சி-சாட்" என்ற தாள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி.,யும் இந்த தாளை சேர்த்திருக்கிறது.

           பல ஆண்டுகளாக தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருப்பவர்கள், புதிதாக இப்பகுதியை படிக்க வேண்டும். முதன்முதலாக தேர்வு எழுதுவோர், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள தமிழ், அறிவியல் மற்றும் சமூகவியல் புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும். பொருளாதாரம் குறித்த கேள்விகளுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொருளாதார பாடங்களே போதும்.

           தேர்வுகளில் தத்துவ இயல், மனத்திறன் தொடர்பான கணிதக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இப்பகுதிக்கு ஆழமாக படிக்க வேண்டியதில்லை. சந்தையில் கிடைக்கும் வழிகாட்டி நூல்களை புரட்டினாலே போதும்.

               நடப்பு நிகழ்வுகள் குறித்த வினாக்களுக்கு, முக்கியத்துவம் தரப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு விடையளிக்க, தினமும் செய்தித்தாள்களைப் படித்து, குறிப்பு எடுக்க வேண்டும். முக்கிய செய்தி, சிறப்பு கட்டுரை, தலையங்கம் ஆகியவற்றை சேகரித்து வைக்க வேண்டும்.

             இந்திய அரசியலமைப்பு மற்றும் ஐந்தாண்டுத் திட்டங்களில், குறைந்தது 5 கேள்விகள் தவறாமல் இடம் பெறும். முக்கிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்கள், பிரிவுகள் ஆகியவை பற்றிய பட்டியலை சொந்தமாக தயார் செய்து வைத்து கொள்ளலாம்.

           அறிவியல் பாடங்களைப் படிக்கும் போது, அதன் நடைமுறை, பயன்பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் சயின்சில் அடிப்படையாக 2 கேள்விகள் இருக்கும். இதற்கு கம்ப்யூட்டர் குறித்த, இயல்பான அறிவே போதும்.

            மொழிப் பாடம் விருப்பப் பாடமாக தமிழை தேர்வு செய்வதா, ஆங்கிலமா என்ற குழப்பம் காணப்படுகிறது. ஆரம்பம் முதல் ஆங்கிலத்தில் படித்து, புலமை பெற்றவர்கள் ஆங்கிலத்தை தேர்ந்தெடுக்கலாம். மற்றவர்கள் தமிழை தேர்வு செய்தல் நலம்.

             பாடவாரியாக அட்டவணை தயார் செய்ய வேண்டும். தேர்வுக்கு முன் குறைந்தபட்சம், 10 மாதிரி தேர்வுகளை எழுத வேண்டும். பழைய வினாத்தாள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்திலேயே கிடைக்கின்றன. "சி-சாட்" வினாக்களை பொறுத்த வரை, சொந்தமாக படிக்க முடியாது என்பதால், பயிற்சி மையத்தில் படிக்கலாம்.

           இந்து அறநிலையத்துறை சார்ந்த பணிகளுக்கான தேர்வுக்கு, சைவமும் வைணவமும், இந்து சமய இணைப்பு விளக்கம் போன்ற நூல்களை தேர்வு ஆணையமே பரித்துரைத்திருக்கிறது. இப்புத்தகங்கள் பெரிய கோயில்களில் கிடைக்கின்றன.

           ஒரு தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால், படிப்பதை நிறுத்தி விடாதீர்கள். பணியில் சேரும் வரை என்ன வேண்டுமானாலும் நிகழலாம். கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு. வெற்றி பெற வாழ்த்துகள்.




2 Comments:

  1. Lot of Thanks for giving healthy information

    ReplyDelete
  2. One Important doubt, You said for Group-II, main examination will be of descriptive type. Please clarify whether they are going to give any subject option for descriptive type (like Tamil, History, Science). Because those who are familiar in their subjects need not study other Or common subject which includes everything. Please ask TNPSC, a lot of confusion on this section

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive