"நம் நாட்டில், ஆசிரியர்களின் கல்வி போதிக்கும் திறன், எதிர்பார்ப்பை
பூர்த்தி செய்யும் வகையில் இல்லை. கல்வித் துறையில் உள்ள, முக்கிய
பிரச்னைகளுக்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும்," என பிரதமர் மன்மோகன் சிங்
பேசினார்.
நாட்டின் குடிமகன்கள், தரமான கல்வி கற்றால் மட்டுமே,
நாடு, வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதை, அரசு உணர்ந்துள்ளது. ஐ.மு.,
கூட்டணி அரசு, பதவிக்கு வந்ததிலிருந்து, கல்வித் துறைக்கு அதிக
முக்கியத்துவம் அளிக்கிறது. இத் துறையில், அதிகமான முதலீடு
செய்யப்படுகிறது.
சமுதாயத்தின் அடித்தட்டில் உள்ளவர்களும், தரமான கல்வி
கற்க வேண்டும். தரமான கல்வி கற்பதற்கு, அவர்களுக்கு, போதிய வாய்ப்புகளை
ஏற்படுத்தி தர வேண்டும். நம் நாட்டில், ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும்
திறன், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை.
கல்வித் துறையில், இது போன்ற பல்வேறு பிரச்னைகள் உள்ளன.
இதற்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும். தரமான கல்வியை அளிப்பதில்,
கேந்திரிய வித்யாலயா சிறப்பாக செயல்படுகிறது. இந்த பள்ளிகளில், தங்களுக்கு
அருகில் உள்ள, மற்ற பள்ளிகளுக்கு, முன் மாதிரியாக செயல்பட
வேண்டும்.இவ்வாறு, மன்மோகன் சிங் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...