நர்சரி பள்ளிகளுக்கு கல்வி உரிமை சட்டம் ( ஆர்.டி.இ.,) பொருந்தாது,
நர்சரி பள்ளி சேர்க்கை குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம்
என்று மத்திய அரசு, டில்லி ஐகோர்டில் தெரிவித்துள்ளது.
இதுபற்றி மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜிவ் மெஹ்ரா
ஐக்கோர்டில் கூறுகையில், கல்வி உரிமை சட்டத்தில் பிரிவு 13ன் படி 6 முதல்
14 வயதுக்குட்டபட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய தொடக்கக்கல்வி
கொடுக்க வேண்டும். இப்பிரிவில் 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள்
வரமாட்டார்கள் என்றார்.
இது பற்றி மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் இயக்குனர் விக்ரம் சகாய்
கூறுகையில், பிரிவு 12(1)(சி)ன் படி, முதல் வகுப்பில் 25 சதவீத பின்தங்கிய
ஏழை மாணவர்களுக்கு, அவர்கள் படிப்பு காலம் வரை இலவச மற்றும் கட்டாய தொடக்க
கல்வி கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது. அந்தந்த மாநில அரசுகள், பிரைமரி,
நர்சரி பள்ளிக் கல்வி சேர்க்கை குறித்த முடிவை எடுத்துக் கொள்ளலாம்
என்றார்.
தொண்டு நிறுவன வழக்கறிஞர் அசோக் அகர்வால் கூறுகையில், அரசு உதவிபெறாத
அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, மத்திய அரசின் இந்த ஒப்புதல்
மகிழ்ச்சி தரக்கூடியது என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...