விழுப்புரம் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் அண்ணா மறுமலர்ச்சி
திட்டத்தில் கட்டப்பட்ட நூலகங்கள் பெரும்பாலும் காட்சிப் பொருளாகவே
மாறிவிட்டன. இவற்றை செயல்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற
கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நூலகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களும், கிராம மக்கள்
நூல்களை அமர்ந்து படிப்பதற்காக 15 சேர்களும், மின் விசிறிகள், இரண்டு
டேபிள்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டது.இதற்காக நூலகரும்
நியமிக்கப்பட்டனர்.
மாதந்தோறும் நூலகருக்கு ஊராட்சி சார்பில் 750 ரூபாய் சம்பளம்
வழங்கப்படுகிறது. மேலும், தினசரி செய்தி தாள்கள், மாத இதழ்கள் ஆகியவற்றை
ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் வரவழைத்துக் கொள்ளலாம். நூலகத்திற்கான
பராமரிப்புகளை ஊராட்சி நிர்வாகம் கவனித்துக் கொள்கிறது.
இவ்வளவு வசதிகள் இருந்தும் பெரும்பாலான கிராமங்களில் நூலகங்கள் வெறும்
காட்சிப் பொருளாகவே மாறிவிட்டது. இதுகுறித்து கிராம மக்கள் சம்மந்தப்பட்ட
ஊராட்சி தலைவரிடம் பொதுமக்கள் கேட்கும்போது, வீண் பிரச்னைகள் ஏற்படுவதாக பல
கிராமங்களிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கிராம மக்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்ற தேவைக்காக துவங்கப்பட்ட
இந்த நூலகங்கள் செயல்படாததால் அரசுப் பணம் வீணாகிறது. மாவட்டத்திலுள்ள
அனைத்து நூலகங்களும் முறையாக செயல்படுவதை ஆய்வு நடத்த அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் செயல்படாத நூலகங்களை செயல்படுத்தவும், நூலகருக்கு
சம்பளம் வழங்கிடவும் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புத்தக
ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...