மத்திய பிரதேச மாநிலம் ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி ஆராய்ச்சி
நிறுவனத்தின் இயக்குனர் ஜாகித் ஜெயின் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர்,
தமிழகம் வந்துள்ளனர்.
இங்கு இயங்கும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்
பள்ளிகள் குறித்தும், இங்கு கற்றுக் கொடுக்கப்படும் சமச்சீர் கல்வி
செயல்முறை பாடங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.தமிழகத்தின்
பல்வேறு மாவட்ட பள்ளிகளில் ஆய்வு செய்தவர்கள் நேற்று முன்தினம்
ராமேஸ்வரத்திலுள்ள நடுநிலைப் பள்ளிகளை ஆய்வு செய்தனர்.
ராமேஸ்வரம்
வர்த்தகன் தெருவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கலாம் படித்த எண்.1
நடுநிலைப் பள்ளிக்கு வந்தனர். அங்கு மாணவர்கள் செயல்முறை கல்வி பயிலும்
முறைகளை பார்வையிட்டு, மாணவர்களிடம் சமச்ச்சீர் கல்வி குறித்து
கேட்டறிந்தனர்.பின்னர் இயக்குனர் ஜாகித் ஜெயின் நிருபர்களிடம் கூறுகையில்,
‘தமிழக பள்ளிகளில் சமச்சீர் கல்விமுறை, கற்றுத்தரும் விதம் சிறப்பாக
உள்ளது. இதுகுறித்து மத்தியபிரதேச அரசிடம் அறிக்கை சமர்ப்பித்து,
தமிழகம்போல் பள்ளிகளில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்படும்’ என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...