தங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தனித்
தேர்வு நடத்த, அரசு ஆவன செய்ய வேண்டும் என, ஆண்டு தேர்வு எழுத
அனுமதிக்கப்படாத, பி.டி.எஸ்., மாணவர்கள் கோரி உள்ளனர்.
இவர்களில், 40 பேர், பி.டி.எஸ்., இறுதியாண்டு மாணவர்கள். தேர்வு எழுத
போதுமான வருகைப் பதிவேடு உள்ளிட்ட தகுதிகள் இருந்தும், 92 மாணவர்கள்
தேர்வெழுத அனுமதிக்கப்படாதது குறித்து, கூட்டமைப்பின் சார்பில், முதல்வர்
தனிப்பிரிவில் புகார் அளித்தோம். பல்கலைக்கழக நிர்வாகத்திடம்
முறையிட்டோம்.இதுவரை, இம்மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை.
இம்மாதம், 28ம் தேதியுடன், தேர்வுகள் முடிவடைகின்றன. எதிர்காலத்தை
கருத்தில் கொண்டு, இம்மாணவர்களுக்கு தனித் தேர்வு நடத்த, தமிழக அரசு ஆவன
செய்ய வேண்டும். இவ்வாறு அருளப்பராஜ் கூறினார்.
குறிப்பிட்ட மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படாததற்கு, உரிய காரணங்கள்
இருக்கும் என, மருத்துவப் பல்கலை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...