தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டப்படி, ஒரு ஆட்டோவில் 3 பேர் உட்காரலாம்;
டிரைவரைச் சேர்த்து 4 பேர் பயணிக்கலாம். குழந்தைகளாக இருந்தால், 5 பேர்
வரை அனுமதிக்கலாம் என்கிறது போக்குவரத்துத்துறையின் சுற்றறிக்கை. ஆனால்,
இங்கே நடப்பதென்ன...?
ஆனால், இப்படித்தான் ஆட்டோக்களில் குழந்தைகளை ஏற்றி விட்டு, குதூகலமாக
"டாட்டா" காட்டுகிறார்கள் பெற்றோர்கள். கேட்டால், "நம்ம சக்திக்கு
ஆட்டோவுலதான் அனுப்ப முடியும்" என்பார்கள்; ஆட்டோக்காரர்கள், "பெட்ரோல்
விக்கிற விலைக்கு இத்தனை பேரை ஏத்திட்டுப் போனால்தான் கட்டுப்படியாகுது"
என்பார்கள்.
ஆட்டோவில் புளி மூட்டைகளைப் போல, குழந்தைகளை அடைத்துக் கொண்டு போனாலும்,
வாங்கும் கட்டணத்தில் இவர்கள் குறைவு வைப்பதில்லை; ஆபத்தான வகையில்
குழந்தைகள் அமர்ந்திருக்கிறார்கள் என்று தெரிந்தாலும், வேகத்தையும்
குறைப்பதில்லை. ஏதேனும் ஒரு விபரீதம் நிகழும் வரை, இத்தகைய விதிமீறல்கள்
யாரையும் உறுத்துவதில்லை.
வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு தினமும் ஆயிரம் வேலை இருக்கிறது.
பத்திரிக்கையில் படம் பிடித்துப் போட்டால், இரண்டு நாட்களுக்கு நாலைந்து
ஆட்டோக்களைப் பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள்; மூன்றாவது நாளில்
அவர்களின் மாமூல் பணிக்குத் திரும்பி விடுவார்கள்.
ஆட்டோக்காரர்கள், ஆட்சியர் அலுவலகத்துக்குப் போய், ஒரு மனுவைக் கொடுத்து
விட்டு, மறுபடியும் தங்கள் அன்றாடப் பயணத்தைத் தொடர்வார்கள். இதில்,
ஆட்டோக்காரர்களை மட்டும் குற்றம் சொல்வதற்கில்லை.
மாணவ, மாணவியர்க்கான தனி போக்குவரத்தை உருவாக்காத அரசாங்கம்,
பல கோடி
ரூபாய்களில் கட்டடங்கள் கட்டினாலும் தேவையான பஸ்களை இயக்க மறுக்கும் பள்ளி
நிர்வாகங்கள், விதிமீறலைத் தடுக்காத போக்குவரத்துத்துறை அலுவலர்கள்,
சிக்கனம் என்ற பெயரில் குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாத
பெற்றோர்கள்... எல்லோருமே தவறிழைப்பவர்கள்தான்.
இத்தனை பேருடைய தவறுகளால், ஒரு மழலை கூட ரத்தம் சிந்தி விடக்கூடாது என்பதுதான் நமது மன்றாட்டு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...