அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர்
சேர்க்கையை அதிகப்படுத்த மாணவர்கள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி
திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் சிபிஎஸ்சி தவிர்த்து மற்ற அனைத்து பாடத் திட்டங்களும் தற்போது சமச்சீர் கல்வி முறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் தொடக்கக் கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறை இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 192 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற இறை வழிபாட்டில், தொடக்கக் கல்வியில் தமிழக அரசு வழங்கும் அனைத்து நலத் திட்டங்கள், சலுகைகள் ஆகியவற்றை மாணவர்களுக்கு எடுத்துக் கூறி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் என்றார் அனைவருக்கும் கல்வி இயக்கக் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் வெ. ஜெயக்குமார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...