சாஸ்த்ரா பல்கலைக்கழக திட்டம் மற்றும் மேம்பாட்டிற்கான டீன்
வைத்தியசுப்ரமணியம், சமீபத்தில் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்
நடத்திய கருத்தரங்கில் வழங்கிய கருத்துரை:
பிலிப் அல்பாக் என்ற பிரபல
கல்வியாளர் சொல்கிறார், “ஒவ்வொரு நாடுமே, தங்களிடம் ஒரு உலகத்தரம் வாய்ந்த
பல்கலைக்கழம் இருக்க வேண்டுமென விரும்புகிறது. அது என்ன? மற்றும் அதை
எப்படி பெறுவது என்று ஒருவருக்கும் தெரியவில்லை”.
உங்களுக்கு தேவையான ஒரு பல்கலைக்கழகம் உட்பட அனைத்தையும் பாராளுமன்றம்
அல்லது சட்டமன்ற பெரும்பான்மை மூலம் சாத்தியமாக்கும் நிலை இந்தியாவில்
மட்டுமே இருப்பதாக நான் நினைக்கிறேன். உள்கட்டமைப்பு வசதிகள் நமக்கு
அவசியமில்லை. இன்று, நாட்டிலுள்ள கொள்கை வகுப்பாளர்களின் எண்ணமாக,
உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் இருப்பதாலேயே, இத்தகைய சுய அறிவிப்பும்,
மிகைப்படுத்தலும் ஏற்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், ஐஐடி மற்றும் ஐஐஎம்.,களைப் போல, உலகத்தரம் வாய்ந்த
கல்வி நிறுவனங்கள் இங்கே உள்ளன என்று பெருமை பொங்க நாம் ஓங்கி
குரலெழுப்பும் கல்வி மறுமலர்ச்சி இங்கே உள்ளதால், உலகத்தரம் வாய்ந்த கல்வி
நிறுவனம் என்றால், என்னவென்றே நமக்குத் தெரியாது.
ஐஐடி-சென்னையின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் இந்திரேசன்
கூறியதைப்போல், அரசாங்கம், ஐஐடி.,கள் என்ன செய்ய வேண்டும் என்று
விரும்புகிறதோ, அதை மேற்கொள்ளும் முழு சுதந்திரம், ஐஐடி.,களுக்கு
இருக்கின்றன. ஆனால், உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் என்ற அந்தஸ்தை
வழங்கும் ஏஜென்சிகள், நாம் அந்த தகுதியைப் பெறும் நிலையிலிருந்து வெகு
தொலைவில் இருக்கிறோம் என்றே சொல்கின்றன. நாம் அதைப்பற்றி உண்மையான
அக்கறையுடன் சிந்திப்பதில்லை.
கடந்த 2005ம் ஆண்டு, டைம்ஸ் உயர்கல்வி ரேங்கிங்-ன், முதல் 100
இடங்களிலிருந்து மலேசியா பல்கலைக்கழகம் வெளியேறிவிட்டது. அவ்வளவுதான்..,
அந்த நாட்டில் பெரும் களேபரம் ஆகிவிட்டது. அப்பல்கலையின் துணைவேந்தர் பதவி
விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தனால் இந்த நிலை ஏற்பட்டது என்பதைக்
கண்டறிய, அந்நாடு அரசு ஒரு கமிஷனை அமைக்கும் அளவிற்கு நிலைமை சீரியசானது.
இறுதியில், பல்கலையின் செயல்பாட்டில் குறையில்லை. மாறாக, அங்கீகார
விதிமுறைகளில் ஏற்பட்ட மாற்றமே இந்த சரிவுக்கு காரணம் என கண்டறியப்பட்டது.
ஆனால், இதுபோன்ற ஒரு நடவடிக்கை, நம் நாட்டில் திட்டத்தை உருவாக்கும்
நிலையில் பார்க்க முடிவதில்லை.
உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகத்தை எப்படி பெறுவது? உலகத்தரம் வாய்ந்த
பல்கலைக்கழகத்தை அமைப்பது தொடர்பான கொள்கை உருவாக்கும் நிலையில் நம்மிடம்
தெளிவும், வெளிப்படைத் தன்மையும் இல்லை என்பதற்கான போதிய சான்றுகளை என்னால்
தர இயலும்.
அதற்கு முன்பாக, சில புள்ளிவிவரங்களை தர விரும்புகிறேன். 19ம்
நூற்றாண்டின் மத்தியில், ஒரு உலகத்தரம் வாய்ந்த பல்கலையை அமைக்க, 50
மில்லியன் அமெரிக்க டாலரும், 200 ஆண்டுகளும் தேவைப்பட்டன. 20ம்
நூற்றாண்டின் தொடக்கத்தில், சிகாகோ பல்கலை, இதற்கான நேரத்தைக் குறைக்க
விரும்பியதன் விளைவாக, உலகத்தரம் வாய்ந்த பல்கலையை அமைக்க, 100 மில்லியன்
அமெரிக்க டாலர்களை முன்வந்து ஒதுக்கியது.
கடந்த 2002ம் ஆண்டு, கத்தாரில் உலகத்தரம் வாய்ந்த ஒரு மருத்துவக் கல்வி
நிறுவனத்தை துவக்க 750 மில்லியன் டாலர்களை முதலீடு செய்தது கார்னெல்
பல்கலை. சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா, தனது நாட்டில், அறிவியல் மற்றும்
தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை, 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில்
ஏற்படுத்தியுள்ளார். இதில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இந்தக் கல்வி
நிறுவனம், உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை.
இன்றைய நிலையில், இந்தியாவில், ஒரு உலகத்தரம் வாய்ந்த பல்கலையை
ஏற்படுத்த, 1500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று
மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நான் கூற விரும்புவது என்னவெனில்,
12வது ஐந்தாண்டு இத்திட்டத்தில், 20 பல்கலைகளில் புத்தாக்க முயற்சிகளை
மேற்கொள்ள ரூ.3000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில், நாம் 20
உலகத்தரம் வாய்ந்த பல்கலைகளை உருவாக்கிவிட முடியும். ஆனால், உண்மையில் அது
இரண்டு சதவீதம்தான்.
இது ஒரு நகைச்சுவைப் போல தோன்றலாம். நாம் குறுகிய காலத்திற்குள்,
உலகத்தரம் வாய்ந்த பல்கலைகளை உருவாக்கிவிட நினைக்கிறோம். ஆனால், அதற்கான
வளங்களை நம்மால் திரட்ட முடிவதில்லை.
ஒரு உலகத்தரம் வாய்ந்த பல்கலையின் முதன்மை உள்ளடக்கங்கள் என்னவென்று
பார்த்தோமானால், ஆராய்ச்சி என்பது எங்கே உள்ளார்ந்த அம்சமாக இருக்கிறதோ,
அங்கே ஒரு உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் தேவை. அத்தகைய ஆராய்ச்சி
அடிப்படையிலான பல்கலைகளால் மட்டுமே, உலகளாவிய அறிவுப் பொருளாதாரத்தில்
வளர்ச்சியைக் கொண்டுவர முடியும். தற்போது, உலகெங்கிலுமுள்ள, சர்வதேச
தரத்திலான பல்கலைகள் அனுபவிக்கும் சுதந்திரம் நமக்கு வேண்டும். கடைசியாக,
சமூகத்துடன் நல்ல தொடர்பு இருக்க வேண்டும். ஏனெனில், சமூகம் சந்திக்கும்
பிரச்சினைகளுக்கு, இந்தப் பல்கலைகள் தீர்வுகளை வழங்கும்.
நாம் இதை செய்யும் நிலையில் இருக்கிறோமா? என்ற கேள்வியைக் கேட்டால்,
நாம் இப்போதிருக்கும் குழப்ப நிலையிலிருந்து வெளிவர வேண்டும். ஒரு வகையில்
பார்த்தால், நமது தேசிய அறிவுக் கமிஷன், நமக்கு 1500 விரிவான
பல்கலைக்கழகங்கள் வேண்டுமென்கிறது. மற்றொருபுறம், “இதற்குமேல் புதிய
பல்கலைக்கழகங்கள் வேண்டாம்; அவற்றை, கல்லூரிகளாக தகுதியிறக்கம்
செய்துவிடுங்கள்” என்கிறது டாண்டன் கமிட்டி. இத்தகைய முரண்பாடுகளுக்கு
மத்தியில், ஒரு உலகத்தரம் வாய்ந்த பல்கலையை உருவாக்கும் பெரிய சவால்
நமக்குள்ளது.
பொருளியல் ரீதியான உள்கட்டமைப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து,
ஒரு உலகத்தரம் வாய்ந்த பல்கலையை நாம் அமைக்க முயற்சிக்கையில், சில
பாதிக்கத்தக்க அம்சங்கள் எச்சரிக்கை செய்கின்றன. நல்ல குளிர்சாதன வசதியுள்ள
அறைகள், நீச்சல் குளங்கள், பசுமை வளாகம் மற்றும் விளையாட்டரங்கள் போன்றவை,
ஒரு உலகத்தரம் வாய்ந்த பல்கலையை உருவாக்கிவிடாது அல்லது வெளிநாட்டு
பங்குதாரர்களின் மீது வைக்கும் வலுவான நம்பிக்கை உலகத்தரம் வாய்ந்த
பல்கலையை உருவாக்கிவிடாது. ஏனெனில், அவர்களுக்கு அவர்களுடைய நாட்டில் பல
பிரச்சினைகள் உள்ளன. ஒரு பல்கலையின் வளத்திலிருந்து, இன்னொரு பல்கலையின்
வளத்தை மேம்படுத்த கொடுக்கப்படும் முக்கியத்துவமோ, போதுமான வளங்களின்றி,
பொருளாதார ஆதரவை மட்டுமே வழங்கும் செயல்பாடுகள் ஆகியவற்றால் உலகத்தரம்
வாய்ந்த பல்கலையை உருவாக்கிவிட முடியாது.
ஒரு உலகத்தரம் வாய்ந்த பல்கலையை உருவாக்க, போதுமான காலஅவகாசம்
வேண்டுமென்ற உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு விரிவான ஒப்பீட்டின்
மூலமே நான் இந்த விஷயத்தைப் புரிந்து கொண்டுள்ளேன். நாம், கொள்கை வகுக்கும்
நிலையில் இருக்கிறோம், இது கல்லறையின் மீது வளர்ந்திருக்கும் புல்லைப்
போன்றதாகும். மேலேயிருக்கும் புல் அல்லது மேல்புறமிருக்கும் எந்தவொன்றும்
அதிக ஆற்றலைப் பெற்றிருக்கும். ஆனால், ஆடவோ அசையவோ இயலாத கல்லறையினுள் உள்ள
புல்லால் என்ன நன்மை?
நன்றி - தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...