சில ஆண்டுகளுக்கு முன் இன்ஜினியரிங் படிப்பில், ஐந்து பிரிவுகள் தான்
இருந்தன. தற்போதைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பின் இது 50 பிரிவுகளாக
அதிகரித்துள்ளது. இருப்பினும் ஆடியோ இன்ஜினியரிங் துறை பற்றிய படிப்பு,
அதிகளவில் அறியப்படாததாக உள்ளது.
ரெகார்டிங் ஸ்டுடியோக்களில் பணி புரியும் இவர்கள், ஆடியோ உபகரணங்களை
நிறுவி, ஆடியோ எனப்படும் ஒலியை பதிவு செய்து, எடிட் செய்து, தேவைப்படும்
இடங்களில் மிக்ஸ் செய்து ஆடியோவை துல்லியமாக தேவைப்படும் விதத்தில்
சிந்தசைஸ் செய்து, தருவது இன்ஜினியர்கள் தான். மிக்ஸர் கன்சோல், சிக்னல்
புராசஸர், மைக்ரோபோன், டேப் டெக், டிஜிடல் ஆடியோ உபகரணங்கள், ஸ்பீக்கர்
சிஸ்டம் ஆகியவற்றை இவர்கள் கையாளுகின்றனர்.
பீல்ட் மற்றும் ஸ்டூடியோ ஆடியோ இன்ஜினியர்கள் ஷூட்டிங் லொகேஷன்களில்,
சவுண்டை ரெகார்ட் செய்பவர்கள், பீல்ட் ஆடியோ இன்ஜினியர்கள் என
அழைக்கப்படுகின்றனர். இவர்கள், வி.யூ. யூனிட் போன்ற நவீன கருவிகளைக்
கையாளுகின்றனர்.
துறைப் படிப்பு
நுணுக்கமான பணி என்பதாலும், நவீன கருவிகளை கையாளுவதாலும், இத்துறையில்
நுழைய விரும்புபவர்கள், சிறப்புப் படிப்புகளைப் படிக்க வேண்டும்.
ஆடியோகிராபி அல்லது சவுண்ட் ரெகார்டிங் படிப்பது அவசியம். இது டிப்ளமோ
படிப்பாக வழங்கப்படுகிறது.
வேலை வாய்ப்பு
ஸ்டுடியோ, பிலிம் ஸ்டுடியோ, பிலிம் மற்றும் மல்டிமீடியா நிறுவனங்கள், போஸ்ட் புரடக்ஷன் யூனிட் இவற்றில் ஒன்றில் வேலை பெறலாம்.
கல்வி நிறுவனங்கள்
* The School of Audio Engineering (SAE), Mumbai
* Film and Television Institute of India (FTII), Pune
* Satyajit Ray Film Television Institute (SRFTI), Kolkata.
* Film and Television Institute of India (FTII), Pune
* Satyajit Ray Film Television Institute (SRFTI), Kolkata.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...