தமிழகத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட 29 ஆயிரம் பட்டதாரி ஆசிரிய,
ஆசிரியைகளுக்கு இன்று (1ம் தேதி) பயிற்சி ஆரம்பமாகிறது. இதற்காக அரசு 2
கோடியே 39 லட்சத்து 10 ஆயிரத்து 880 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நான்கு நாட்கள் பயிற்சி முகாம் இன்று (1ம் தேதி) ஆரம்பமாகிறது.
இதில் நெல்லை கல்வி மாவட்டத்தில் நெல்லை டவுன் அரசு மேல்நிலைப் பள்ளி, சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் பாளை பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளோதோர் மேல்நிலைப் பள்ளி, தென்காசி கல்வி மாவட்டத்தில் ஐ.சி.இ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று மையங்களில் இப்பயிற்சி நடக்கிறது.
நெல்லை கல்வி மாவட்டத்தில் தமிழ் 285, ஆங்கிலம் 50 ஆசிரியர்கள், கணிதம் 287, அறிவியல் 295, சமூக அறிவியல் 171 உட்பட மொத்தம் ஆயிரத்து 88 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அறிவியல் பாடத்திற்கு இன்று (1ம் தேதி) முதல் நாளை, வரும் 13, 14ம் தேதிகளிலும், ஆங்கில பாடம் வரும் 8,9,20,21ம் தேதிகளிலும், தமிழ் பாடம் வரும் 6,7,18 மற்றும் 19ம் தேதிகளிலும், கணித பாடம் வரும் 4,5,15 மற்றும் 16ம் தேதிகளிலும், சமூக அறிவியல் பாடம் வரும் 11, 12, 22 மற்றும் 23ம் தேதிகளிலும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...