கருவூலகங்கள் கம்ப்யூட்டர் மயமாவதால், பழைய அரசு ஆணைகள் தேவைப்படுகிறது.
இது, இல்லாத பட்சத்தில், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்
ஏற்படும் நிலை உள்ளது.
கடந்த 1980க்கு முன் உள்ள பள்ளிகளில், ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியாக ஆசிரியர் நியமித்தும், சம்பளம் வழங்க அனுமதியளித்தும், அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் படி, பள்ளிகளிலே சம்பள பில் தயாரித்து, கருவூலகங்களுக்கு அனுப்பப்படும்.
இதை அதிகாரிகள் ஆய்வு செய்து, இ.சி.எஸ்., முறையில் நிதி விடுவித்து, அந்தந்த ஆசிரியர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆசிரியர்களும் வங்கி கணக்கில் இருந்து, ஏ.டி.எம்., கார்டு மூலமாக சம்பளம் பெற்று வந்தனர்.
இந்நிலையில், கருவூலகங்கள் யாவும் கம்ப்யூட்டர் மயமாவதால், சம்பள அனுமதி வழங்கிய ஒரிஜினல் அரசு உத்தரவு வழங்கும் படி, ஆசிரியர்களிடம் கேட்டு வருகின்றனர். ஆசிரியர்களோ, நிலையாக ஒரே பள்ளியில் இல்லாமல், ஆண்டுக்காண்டு இட மாறுதல் பெற்று, பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த உத்தரவோ பள்ளிகளில் முறையாக பாதுகாக்கப்படாமல், உத்தரவு கடிதங்கள் அனைத்தும் நைந்து, சிதைந்து விட்டன. பழைய உத்தரவு இல்லாததால், சம்பள பில் வழங்க முடியாது என, கருவூலகங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது, பழைய உத்தரவு நகல்கள் இல்லாததால், ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...