Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

A Grand Opening Our Website - Ensalai







அன்புள்ள பாடசாலை வாசகர்களுக்கு வணக்கம்.

       நம் பாடசாலை வலைதளம் 5,55,555 பார்வைகளை மிககுறுகிய காலத்தில் கடந்துள்ளது. நமது வலைதளத்தினை சிறப்புற செயல்படுத்தும் வகையில் தொடர்ந்து  ஆலோசனைகள், படிவங்கள், கருத்துருக்கள், அரசாணைகள், Study Materials என அனைத்தையும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நமக்கு இமெயில் மூலம் அனுப்பி வைக்கும் வாசகர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நமது நன்றிகள் பல!.



          http://ensalai.blogspot.in/


      நமது வலைதளத்தில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ள பல்வேறு செய்திதாள்கள் மற்றும் ஊடகங்களில் வெளிவரக்கூடிய கல்வி தொடர்பான புதிய செய்திகளை உடனுக்குடன் பதிவேற்றி வருகிறோம்.

      பார்வையாளர்களின் பேராதரவை தொடர்ந்து தற்போது ஒரு புதிய முயற்சியாக நம் பாடசாலை வலைதளத்தின் துணை வலைதளமாக ”என்சாலை” எனும் வலைதளம் இனிதே துவக்கப்பட்டுள்ளது.






        இந்த ”என்சாலை” வலைதளம் ”நம்சாலை”. ”நம்சாலை”யை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். போகும் வழியில் முள்ளோ, ரோஜாவோ – நாம் கடந்து வந்த பாதையை நினைவு கூர்ந்து, கடக்க வேண்டிய பாதையை நாமே தான் செதுக்க வேண்டும்.

        இந்த வலைதளத்தில் பதிவேற்றப்படுபவைகள் இவை மட்டுமே என்று குறிப்பிட்ட வரையறை வைத்துக்கொள்ளாமல், பார்வையாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு கதைகள், கட்டுரைகள், கவிதைகள், புகைப்படம், குறும்படம், தங்கள் பள்ளியின் சிறப்புகள் என அனைத்தும் பதிவேற்றப்படும்.

         மேலும் தங்கள் வாழ்வில்  நடந்த சுவையான சம்பவங்கள், பொதுநல அக்கறையுடன் தாங்கள் வெளியிடும் கருத்துகள், தங்களின் ஆதங்கம், அறிவுரைகள், தாங்கள் படித்த புத்தகத்தில் மிகவும் பிடித்த விஷயங்கள், திரை விமர்சனம், தங்கள் குழந்தைகள் மற்றும் மாணவர்களின் ஓவியம், கவிதைகள் என அனைத்தும் இந்த வலைதளத்தில் பதிவேற்றப்படும்.

        முக்கியமாக தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உள்ள சிறப்பு வசதிகள், தாங்கள் பயன்படுத்தும் புதுமையான கற்பித்தல் உத்திகள் என அனைத்தையும் புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் எடுத்தும் செய்திகளை Word மூலம் டைப் செய்தும் நமக்கு அனுப்பலாம்.

        இவை அனைத்தும் நம் வலைதள வாசகர்கள் அனைவரின் பார்வைக்கு வைக்கப்படும். மிகசிறந்த படைப்புகள் தாய் தளமான ”பாடசாலை” வலைதளத்திலும் பதிவேற்றப்படும்.

 எனவே உங்கள் திறமையை வெளிபடுத்தும் நல்ல கருத்துக்களை ஷேர் பண்ணுங்களேன். இதன் மூலம் ஓய்வான சமயங்களில் ஒரு நல்ல புத்தகத்தினை படிக்கும் அனுபவத்தை பெறுவீர்கள். உங்கள் திறமையை மென்மேலும் மெருகேற்றி கொள்ளவும் உங்கள் மாணவர்களின் திறமையை ஊக்கப்படுத்தவும் இயலும்.







தங்கள் படைப்புகளை  அனுப்ப வேண்டிய முகவரி-  
Email ID:- padasalai.net@gmail.com


நன்றி!

என்றும் தங்கள் சேவையில் – அன்புடன் பாடசாலை.








2 Comments:

  1. keeeeeeeeeeeeeeeeeeeeeep
    iiiiiiiiiiiiiiiiiiiiiiit
    uuuuuuuuuuuuuuuuuuuuuuup

    ReplyDelete
  2. Amazing site. Hats off to your works

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive