தற்போது, பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் வேண்டுகோளை ஏற்று,
புத்தகங்களின் மாதிரி பிரதிகளை, அந்தந்த மாவட்ட நூலக ஆணை குழுக்களில்
சமர்ப்பிக்க, இம்மாதம், 28ம் தேதி வரை, கால நீட்டிப்பு செய்து
அறிவிக்கப்படுகிறது. பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், மேலும்
தகவல்கள் தேவைப்பட்டால், 044-28524263, 044-28412087 ஆகிய தொலைபேசி
எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.
.
இதுவரை, 15 ஆயிரம் பதிப்பாளர்கள், இணையதளம் வழியாக விண்ணப்பித்துள்ளனர்.
2010, 11 ஆகிய இரு ஆண்டுகளுக்கும் சேர்த்து, 25 கோடி ரூபாய் அளவிற்கு,
புத்தகங்கள் வாங்கப்பட உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. புத்தக
தேர்வுக்குழு, புத்தகங்களின் மாதிரி பிரதிகளை ஆய்வு செய்து, தரமான
புத்தகங்களை தேர்வு செய்து, பரிந்துரைக்கும். அதன் அடிப்படையில், பொது
நூலகத் துறை, புத்தகங்களை வாங்கும். இரு ஆண்டுகளுக்கும் சேர்த்து, 25 கோடி
ரூபாய் அளவிற்கு, தமிழக அரசு புத்தகங்கள் வாங்குவதால், பதிப்பாளர்கள்
மற்றும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...