"பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு, 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை, ஹால்
டிக்கெட் வழங்கப்படும்,' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா
அறிவித்துள்ளார்.
ஆன்-லைனில் விண்ணப்பித்த போது வழங்கப்பட்ட, 10 இலக்க எண்களை தெரிவித்து,
ஹால் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.ஹால் டிக்கெட்டில் உள்ள புகைப்படம்,
பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்வு மையம், தேர்வு எழுத பதிவு
செய்யப்பட்டுள்ள பாடங்கள், தேர்வு நடைபெறும் தேதிகள் ஆகிய விவரங்கள்,
சரியாக உள்ளனவா என்பதை, தேர்வர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
புகைப்படம் பதிவாகவில்லை எனில், இரு புகைப்படங்களை எடுத்துச் சென்று,
ஒன்றை, ஹால் டிக்கெட்டில் ஒட்டி, தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரின்
சான்றொப்பத்தை பெற வேண்டும். மற்றொரு புகைப்படத்தை, தேர்வு மைய
கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
தத்கால் திட்டத்தில் விண்ணப்பித்த தேர்வர்கள் மட்டும், 22, 23 ஆகிய
தேதிகளில், தேர்வுத் துறை இயக்குனரகத்திற்கு, நேரில் வந்து, ஹால் டிக்கெட்
பெற வேண்டும். இவ்வாறு இயக்குனர் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு கல்வி மாவட்ட தேர்வர்களுக்கு, செயின்ட் கொலம்பஸ்
மேல்நிலைப் பள்ளியிலும்; காஞ்சிபுரம், ஆண்டர்சன் மேல்நிலைப் பள்ளியிலும்;
பொன்னேரி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்; திருவள்ளூர் கல்வி மாவட்ட
தேர்வர்களுக்கு, டி.ஆர்.பி.சி.சி.சி., இந்து மேல்நிலைப் பள்ளியிலும் ஹால்
டிக்கெட் வழங்கப்படுகிறது.
சென்னையில் உள்ள நான்கு கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கு,
அண்ணா சாலையில் உள்ள மதரசா மேல்நிலைப் பள்ளியில், ஹால் டிக்கெட்
வழங்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...