ரூ.25 லட்சத்திற்கு மேல் வீட்டு கடன் வாங்கும்
முதல் முறை கடனாளிகளுக்கு, அவர்களின் வீட்டு கடன் வட்டியிலிருந்து ஒரு லட்ச
ரூபாய் ரத்து செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிக்கப்பட்டுள்ளது.
.
2013-14 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று தாக்கல் செய்தார். அதில், 1.4.2013 தேதியிலிருந்து 31.3.2014 தேதிவரை வீட்டு கடனுக்காக விண்ணப்பிக்கும் முதல் முறை வீட்டு கடன் பெறும் நபர்களுக்கு, அவர்களது வட்டியில் ஒரு லட்சம் தள்ளுபடி செய்யப்படும் என்றார்.
இதன்படி வீட்டு கடன் தொகை ரூ.25 லட்சமாக இருக்க வேண்டும். இதன் மூலம் சொந்த வீடு கட்ட கனவுகாணும் குடும்பங்களுக்கு ஏதுவாக இருக்கும். மேலும் கட்டுமானப் பணி, ஸ்டீல், சிமென்ட், செங்கல், மரம், கண்ணாடி போன்றவற்றின் விற்பனை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் சிதம்பரம் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...