"கண்டபடி, தேவையற்றதை எல்லாம் படிக்காமல், தேவையானதை, தேர்வில் எந்த
மாதிரியான கேள்விகள் வரும் என்பதை நன்றாக புரிந்துகொண்டு, அதற்கேற்ப
படித்தால், கண்டிப்பாக போட்டித் தேர்வுகளில் சாதிக்க முடியும்,&'&'
என, குரூப்-1 தேர்வில், முதலிடம் பெற்ற, மதுராந்தகி கூறினார்.
ஆனால், முதல்முறையாக, கலந்தாய்வு நடத்தி, தேர்வர்களின் விருப்பத்திற்கு
தகுந்தாற்போல், பணிகளை ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தேர்வு பெற்ற
அனைவரும், கலந்தாய்வில் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டம்,
சின்னகாம்பட்டி புதூரைச் சேர்ந்த மதுராந்தகி, முதலிடம் பெற்றிருந்தார்.
இவர், ஆர்.டி.ஓ., பணியை தேர்வு செய்தார். ஈரோடு மாவட்டம், சரவணமூர்த்தி,
மதுரை, ஷேக் மைதீன் ஆகியோர், அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர். மூன்று
பேரும், பொறியியல் பட்டதாரிகள். இவர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., தலைவர்
நடராஜ், பணி ஒதுக்கீடு உத்தரவுகளை வழங்கினார்.
ஒரே தேர்வில் சாதித்தது குறித்து, மதுராந்தகி கூறியதாவது: முதல்
முயற்சியிலேயே தேர்வு பெற்றது, மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாவற்றையும்
படிக்காமல், தேர்வுக்கு தேவையில்லாததை படிக்காமல், தேர்வுக்கு ஏற்ற
பகுதிகளை தேர்வு செய்து, கடினமாக உழைத்தால் சாதிக்கலாம். அரசுப் பணி
என்றாலே, லஞ்சம் பெறுபவர்கள் என்ற எண்ணம், மக்கள் மத்தியில் உள்ளது. இதை
மாற்ற வேண்டும் என்று நம்புகிறேன். பணியில், வெளிப்படைத் தன்மையை
கடைபிடிப்பேன். இவ்வாறு மதுராந்தகி கூறினார்.
தேர்வு பெற்ற அனைவருக்கும், விவேகானந்தரின் சிந்தனைகள் அடங்கிய
புத்தகத்தை, நடராஜ் வழங்கினார். இது குறித்து அவர் கூறியதாவது: மக்கள்
சேவையே, மகேசன் சேவை என, விவேகானந்தர் கூறினார். அவரின், 150வது ஜெயந்தி
விழா, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நேரத்தில், அரசுத்
துறைகளில், உயர் பதவிகளில் பணியாற்ற தேர்வு பெற்றுள்ள தேர்வர்கள், சேவையின்
மகத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும். எனவே, விவேகானந்தரின் சிந்தனைகள்
அடங்கிய புத்தகத்தை, அவர்களுக்கு வழங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...