டி.எஸ்.பி., - ஆர்.டி.ஓ., உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 25
பணியிடங்களை நிரப்ப, 16ம் தேதி, குரூப்-1, முதல்நிலைத் தேர்வு நடக்கிறது.
மிக குறைந்த காலி இடங்கள் என்ற போதும், இந்த தேர்வுக்கு, எப்போதும் இல்லாத
அளவிற்கு, 1.26 லட்சம் பேர், போட்டி போடுகின்றனர்.
முதல்நிலைத் தேர்வு, 300 மதிப்பெண்களுக்கு நடக்கும்.
இதன்பின், முக்கிய தேர்வு, மூன்று தாள்களாக, தலா, 300 மதிப்பெண்கள் வீதம்,
900 மதிப்பெண்களுக்கு நடக்கும். மூன்று தாள்களுமே, பொது அறிவை சோதிப்பதாக
இருக்கும்.
இதைத் தொடர்ந்து, 120 மதிப்பெண்களுக்கு, நேர்முகத்
தேர்வு நடக்கும். முக்கியத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும்
மதிப்பெண்கள் அடிப்படையில், தேர்வு செய்யப்படுவர்.
16ம் தேதி நடக்கும் தேர்வில், ஒரு பணியிடத்திற்கு,
5,040 பேர் வீதம், போட்டி போடுகின்றனர். குரூப்-1 தேர்வில், தேர்வு
பெற்றால், எதிர்காலத்தில், பதவி உயர்வு மூலம், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக பதவி
ஏற்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
அதிகாரம் உள்ள பதவிகளும், கை நிறைய சம்பளமும் நிறைந்த
பணிகளாக, குரூப்-1 பதவிகள் உள்ளன. இதன் காரணமாகவே, இந்த தேர்வுக்கு,
பட்டதாரிகள் மத்தியில், கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...