TET மற்றும் TRB மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு உடனடி சம்பளம் நல்லது
TET மற்றும் TRB மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் பெரும்பாலானோருக்கு சம்பளம் பெற்று வழங்கப்பட்டு விட்டது. ஆனாலும் ஒரு சில பள்ளிகளில் மட்டும் நிர்வாக காரணங்களால் இதுவரை சம்பளம் பெற்று வழங்கப்பட வில்லை. ஆனால் உடனடியாக சம்பளம் பெறுவதில் உள்ள நன்மை களை இப்போது பார்க்கலாம்.
நன்மை 1.
TET & TRB மூலம்
பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தோராயமாக இதுவரை கீழ்கண்டவாறு சம்பளம் பெற்று இருப்பார்கள்.
பட்டதாரி ஆசிரியர்கள் : ரூபாய் 24,888
இடைநிலை ஆசிரியர்கள் : ரூபாய் 15,590
இந்நிலையில் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு
தொழில் வரி 706 ரூபாயும், இடைநிலை ஆசிரியர்களுக்கு 238 ரூபாயும் கட்ட வேண்டி இருக்கும். ஆனால் அதிகபட்ச
வருமான கழித்தம் 2,00,000 ரூபாய்க்குள்
இருப்பதால் இந்த ஆண்டு வருமான வரி கட்ட வேண்டியதில்லை. ஆனால் அதே சமயம் எந்த ஆசிரியருக்காவது
நிர்வாக சிக்கல்களால் சம்பளம் பெறுவது கால தாமதம் ஏற்பட்டு பிப்ரவரிக்கு பிறகு மார்ச்
மாதத்தில் அரியர் தொகையாக பெற்று வழங்கப்பட்டால் தற்போது தொழில் வரி கட்ட தேவையில்லை.
ஆனால் அடுத்த 1 ஆண்டிற்க்கான மொத்த சம்பளம் 3,00,000 ரூபாய்க்கு அதிகமாக இருப்பதால் தற்போது வாங்கும் அரியர் தொகை தோராயமாக ரூபாய் 65,000 எனில் அதற்கு
வருமான வரி ரூபாய் 6,500 + 200 கல்வி வரி = ரூபாய் 6,700 கட்ட வேண்டி இருக்கும்.
நன்மை 2
தற்போது வரை TET மூலம் நியமிக்கப்பட்ட நியமனங்கள் நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு உட்பட்டவை என்பதாலும் உடனடியாக சம்பளம் பெற்றுவிடுவது நல்லது.
எனவே இதுவரை சம்பளம்
பெறாத ஆசிரியர்கள் தங்களின் தலைமை ஆசிரியரிடம் விரைந்து சம்பளம் பெற்று வழங்குமாறு
பணிவுடன் கேட்டுக்கொள்வது நல்லது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...