TET Study Material - 21
TET Study Material - 20
TET Study Material - 19
TET Study Material- 18
TET Study Material - 17
TET Study Mateial - 16
TET Physics Study Material - 15
TET Physics Study Material - 14
TET Study Material - 13
TET Physics Study Material - 12
TET Study Material - 11
TET Study Material - 10
TET Study Material -9
TET Study Material - 8
TET Study Material - 7
TET Study Material - 6
TET Study Material - 5
TET Study Material - 4
TET Study Material - 3
TET Study Material - 2
தகுதித் தேர்வில் தோல்வியைத் தழுவும் ஆசிரியர்கள்!
ReplyDeleteமத்திய செகண்டரி கல்வி போர்டு (சிபிஎஸ்இ) நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் 99 சதவீத ஆசிரியர்கள் தோல்வியைத் தழுவுகிறார்கள் என்ற தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
அ னைவருக்கும் கட்டாய இலவசக் கல்விச் சட்டப்படி, ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணிபுரிவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வைக் கட்டாயமாக எழுத வேண்டும். மத்திய செகண்டரி கல்வி போர்டு (சிபிஎஸ்இ) இந்தத் தகுதித் தேர்வை நடத்துகிறது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. சிபிஎஸ்இ நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. 7.95 லட்சம் பேரில் ஒரு சதவீத ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தத் தகுதித் தேர்வு 2011-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து தேர்ச்சி விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. பிஎட் பட்டப் படிப்பைத் தரமானதாக்க வேண்டிய எச்சரிக்கை மணி இது என்கிறார்கள்கல்வியாளர்கள்.
ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணிபுரிய விரும்புபவர்கள் முதல் தாளையும் ஐந்தாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணிபுரிய விரும்புபவர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்புவரை பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள் இந்த இரண்டு தாள்களையும் எழுத வேண்டும். கடந்த நவம்பரில் சிபிஎஸ்இ நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 9.40 லட்சம் பேர் பதிவு செய்தார்கள். அதில், 7.95 லட்சம் பேர் அத்தேர்வை எழுதினர். அதில் முதல் தாள், இரண்டாம் தாள் அல்லது இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 4,849 மட்டுமே.
முதன் முறையாக 2011-ஆம் ஆண்டில் சிபிஎஸ்இ நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் 9 சதவீதம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். அதையடுத்து கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற இந்தத் தேர்வில் தேர்ச்சி விகிதம் 7 சதவீதமாகக் குறைந்து விட்டது. தற்போது இந்தத் தேர்ச்சி விகிதம் ஒரு சதவீதத்துக்கும் குறைந்து விட்டது கல்வியாளர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிய பிஎட் பட்டம் பெற்றவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க தில்லி அரசு தீர்மானித்துள்ளது.
தமிழகத்தின் நிலையும் திருப்திகரமாக இல்லை. தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலையில் நடத்திய ஆசிரியர்தகுதித் தேர்வை எழுதிய 6.60 லட்சம் பேரில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றார்கள். தேர்வு எழுதியவர்களுக்கு நேரம் போதவில்லை போன்ற காரணங்களை அடுத்து, தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக உயர்த்தி மறு தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், அந்தத் தேர்வை எழுதிய 6.56 லட்சம் பேரில் 19,246 பேரே தேர்ச்சி பெற்றனர். மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்பிப்பதற்காக உள்ள ஆசிரியர்களே, அதற்கான தகுதித் தேர்வில் இந்த அளவுக்குத் தடுமாறினால் என்ன செய்வது
- புதியதலைமுறை நாளிதழ்
பணியில் சேருவதற்கு நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ReplyDeleteஆசிரியர் பணியில் சேருவதற்கு நடத்தப்படும் தகுதித்தேர்வினை ரத்து செய்யக்கோரிய மனுவினை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.
தகுதித்தேர்வு
மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சந்திரன். இவர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித்தேர்வினை ரத்து செய்யக்கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், ‘‘ஆசிரியர்கள் ஏற்கனவே உரிய பயிற்சியினை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர். அதன் பிறகு அவர்களை பணியில் சேர்க்க தகுதித்தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இது படித்து முடித்துவேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் வேலை வாய்ப்பினை பாதிக்கிறது. எனவே தற்போது தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய நடத்தப்படும் தகுதித்தேர்வினை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.
அடிப்படை உரிமை
இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்பாக விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:–குழந்தைகளுக்கு இலவசமாக கட்டாய கல்வி வழங்க வேண்டும் என்பது அவர்களுக்கான அடிப்படை உரிமையாக உள்ளது. அதன்படி குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 526 பேர் கலந்து கொண்டனர். இதில் 2 ஆயிரத்து 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அந்த தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு அக்டோபர் மாதம் துணைத்தேர்வு நடத்தப்பட்டது. அதனை 6 லட்சத்து 43 ஆயிரத்து 95 பேர் எழுதினர். அதில் 19 ஆயிரத்து 261 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
மனு தள்ளுபடி
அடிப்படை வசதிகள் இல்லாத, முறையாக அனுமதி பெறாத ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடந்த 1993–ம் ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ஏராளமான நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்தநிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தகுதித்தேர்வு நடத்துவதில் தவறு இல்லை. இந்த தேர்வு அவர்களது வேலை வாய்ப்பினை பாதிக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
1200 பணி இடங்கள் காலி:கணினி அறிவியலை பிற ஆசிரியர்கள் நடத்திவரும் அவலம்,பொதுத் தேர்வு மாணவர்கள் தவிப்பு.
ReplyDeleteதமிழகத்தில், தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில், கணினி அறிவியல் ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளதால், பிற பாட ஆசிரியர்கள், அப்பாடத்தை நடத்தி வருகின்றனர். இதனால், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின் கீழ், ஆண்டுதோறும் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.
2001 முதல், 2012 வரை, தமிழகம் முழுவதும், 1,200 பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. இவற்றில், கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், 1,200 பணியிடங்கள் காலியாக உள்ளன. தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளிகளில், பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியின் மூலமாக, குறைந்த சம்பளத்துக்கு, கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பல பள்ளிகளில், பிற பாடங்களை எடுக்கும் ஆசிரியர்கள், கணினி அறிவியல் பாட வகுப்புகளை நடத்துகின்றனர். இதனால், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், இப்பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம்உள்ளது.
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலர், விஜயகுமார் கூறியதாவது: கடந்த, எட்டு ஆண்டுகளில், 1,200 பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. இவற்றில், 2002-10 வரை தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், முதலில் ஐந்து முதுகலை ஆசிரியர்களுக்கும், பின், ஒன்பது ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்கப்பட்டன. ஆனால், கணினி அறிவியல் பாடங்களுக்கு, ஆசிரியர்கள் நியமிக்கவில்லை. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், 2008-09ல், 2,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதிலும், கணினி அறிவியல் ஆசிரியர்கள் ஒருவர் கூட இல்லை.இப்பாடத்துடன், காலியாக உள்ள பிற பாட ஆசிரியர் காலி பணியிடங்களையும் நிரப்ப, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், "கணினி அறிவியல் பாட ஆசிரியர்கள், பணி நியமனம் சார்ந்தவழக்கு நிலுவையில் இருப்பதே, இதற்கு காரணமாக இருக்கலாம். இதுசார்ந்த வேறு எவ்வித தகவல்களும், எங்களால் தெரிவிக்க இயலாது' என்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -
தமிழ் வழியில் பி.எட் படித்தவர்கள் யார்?
ReplyDeleteஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகஉள்ள 3438 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்க அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த மே 27ம் தேதி போட்டி தேர்வு நடந்தது. 1 லட்சத்து 43 ஆயிரம் பேர் எழுதினர். 3103 பேர் தேர்ச்சி பெற்றனர். டிசம்பர் 11ம் தேதி பணி நியமனம் பெற தகுதி உள்ளவர்கள் பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் உள்ளபடி முதுநிலை பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி நியமனம் வழங்கப்பட்டது.
அதே போல தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியமனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முதுநிலைப் பட்டம், பி.எட் பட்டம் ஆகியவற்றை தமிழ் வழியில் படித்துள்ளதாக விண்ணப்பங்களில் குறிப்பிட்டுள்ள பட்டதாரிகளுக்கு அரசு உத்தரவுப்படி 20 சதவீதம் பணி நியமனம் வழங்கப்பட வேண்டியுள்ளது. இதையடுத்து எந்தெந்தபல்கலைக் கழகங்கள் தமிழ் வழியில் முதுநிலை மற்றும் பி.எட் பட்டங்களை நடத்துகின்றன என்ற விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது.
தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் (பி.எட் பல்கலை) தனியார் பி.எட் கல்வி நிறுவனங்கள் தமிழ் வழியில் பி.எட் வகுப்புகளை நடத்தி பட்டம் வழங்கி இருக்கிறதா என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிய விரும்புகிறது. அதனால் பி.எட் பட்டம் நடத்தும் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் கடிதம் எழுதி விவரம் கேட்டுள் ளது. வரலாறு, வணிகவி யல், பொருளியல் பாடங் களை தமிழ் வழியில் படித்துள்ள முதுநிலைப் பட்டதாரிகளுக்கான காலிப் பணியிடங்கள் 150 வரை உள்ளன. பட்டியல் பெறப்பட்டதும், இந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.
எந்தெந்த துறைகளில் எவ்வளவு காலி இடங்கள்? ஆண்டு தேர்வுபட்டியலை டி.என்.பி.எஸ்.சி. நாளைi வெளியிடுகிறது.
ReplyDeleteஎந்தெந்த துறைகளில் எவ்வளவு காலி இடங்கள்? என்ற ஆண்டு தேர்வு பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. நாளை ் (புதன்கிழமை)வெளியிடுகிறது. இதில் ஏறத்தாழ 20 ஆயிரம்காலி இடங்கள்அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டித்தேர்வுகள் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் எழுத்தர் பணி தொடங்கி துணை கலெக்டர் பதவி வரையிலான பணி இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக நிரப்பப்படுகின்றன. இதற்கான குரூப்–1, குரூப்–2, குரூப்–4 என பல்வேறு விதமான
போட்டித்தேர்வுகளை நடத்திவருகிறது. துணை கலெக்டர், டி.எஸ்.பி. போன்ற உயர்பதவிகள் குரூப்–1 தேர்வு மூலமாகவும், நகராட்சி கமிஷனர், தலைமைச்செயலக உதவி பிரிவு அதிகாரி (ஏ.எஸ்.ஓ.), சார்–பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர் உள்ளிட்ட சார்நிலை பதவிகள்குரூப்–2 போட்டித்தேர்வு மூலமாகவும், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) ஆகிய பதவிகள் குரூப்–4 தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.ஆண்டு தேர்வு பட்டியல் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.), ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் போன்ற தேர்வாணையங்கள் ஓராண்டில் என்னென்ன பதவிகளுக்கு என்ன தேர்வுகள் நடத்தப்படும்? என்ற தேர்வுபட்டியலை முன்கூட்டியே வெளியிட்டுவிடும். இது தேர்வுக்கு படித்துக்கொண்டிருப்போருக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். இதே போன்று, டி.என்.பி.எஸ்.சி.யும் ஆண்டு தேர்வுபட்டியல் (ஆனுவல் பிளானர்) முறையை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.அதில், எவ்வளவு காலி இடங்கள்? தேர்வு நாள், தேர்வுமுடிவு வெளியாகும் தேதி, நேர்முகத்தேர்வு நாள், இறுதி தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி என அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருந்தது. காலக்கெடுவுடன் தேர்வு நடத்தப்பட்டதால் தேர்வுக்கு தயாராகும் மாணவ–மாணவிகளும் உற்சாகத்தோடு படித்தார்கள்.நாளை மறுநாள் வெளியாகிறது இந்த நிலையில், 2013–ம்ஆண்டு தேர்வுபட்டியல் ஜனவரி 28–ந் தேதி (நேற்று) வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் அறிவித்து இருந்தார். ஒவ்வொரு தேர்வுக்கான தேதியும் யு.பி.எஸ்.சி., ஸ்டாப் செலக்ஷன் கமிஷன், வங்கிப்பணியாளர் தேர்வாணையம் போன்றவற்றின் தேர்வு தேதியும் ஒரேநாளில்வந்துவிடக்கூடாது என்பது துல்லியமாக ஆய்வு செய்யப்படுவதால் இப்பணி உரிய காலத்தில் முடியவில்லை. இன்ற்றைய நிலவரப்படி, தேர்வு தேதி முடிவுசெய்யும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. எனவே,தேர்வுபட்டியல் நாளை மறுநாள் (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது.தேர்வுபட்டியலை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் வெளியிட, முதல் பிரதியை அதன் செயலாளர் மா.விஜயகுமார் பெற்றுக்கொள்கிறார். அன்றைய தினம் அனைவரும் தெரிந்துகொள்ளும் வண்ணம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்திலும் தேர்வுபட்டியல் வெளியிடப்படும். 20 ஆயிரம்காலி இடங்கள் குரூப்–4 தேர்வு நிலையில் 10 ஆயிரம்இடங்களும், குரூப்–2 தேர்வு நிலையில் 6 ஆயிரம் இடங்களும், இதர தேர்வுகளையும் சேர்த்து ஏறத்தாழ 20 ஆயிரம் காலி இடங்கள் இந்த தேர்வுபட்டியல் மூலம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TETல் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக பணி வழங்கப்படதோர் தொடுத்த வழக்கு நேற்று மதுரை கோர்டில் தள்ளுபடி செய்யப்பட்டது TETல் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக பணி வழங்கப்படதோர் தொடுத்த வழக்கு நேற்று மதுரை கோர்டில் தள்ளுபடி செய்யப்பட்டது . கடந்த TET தேர்வில் வெற்றி பெற்றும்இரட்டை பட்டம் காரணமாக ஆசிரியர் தேர்வு வாரியம் இவர்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதில் தங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக பதிவு செய்தனர்.இவ்வழக்கின் மீது கடந்த 21.12.2012முதல் விசாரணை நடைபெற்றுவந்தது. இறுதியாக நேற்று(29.01.2013) தீர்ப்பளித்த நீதிபதி திரு.இராம சுப்பிரமணியம் அவர்கள், இரட்டை பட்டங்கள் ஆசிரியர் பணிக்கு செல்லாது என்று தீர்ப்பளித்து மனுவைதள்ளுபடி செய்தார்
ReplyDeleteAll cases against TET 5% Relaxation are cancelled in last week. Can Padasalai or any one give detailed news about this
ReplyDeleteno, go search writ petition case no 33375 in madras high court pending case
Deleteஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய முடியாது
ReplyDeleteவேலைக்கு படிப்பு போதாது தகுதியும் இருக்க வேண்டும்
மதுரை:தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யக்கோரி, பள்ளி நிர்வாகிகள் பலர் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். மனுக்களில், Ôஎங்கள் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க அனுமதி கேட்டு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினோம். ஆனால், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என கல்வி அதிகாரி உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.மனுக்களை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரித்தார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு:தமிழகத்தில் ஆசிரியர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலும், பின்னர், மாநிலபதிவு மூப்பு அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தி,அதில் வெற்றி பெறுபவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.மாணவர்களுக்கு கட்டாய கல்வி, தரமான கல்வி கொடுக்க வேண்டியது அரசுகளின் கடமை. பதிவு மூப்பு அடிப்படையில் மட்டும் ஆசிரியர்களை நியமிக்கும் போது தகுதியான, தரமான ஆசிரியர்கள் கிடைக்கமாட்டார்கள்.
தரமான கல்வி அளிக்காத அரசு உதவி பெறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத, ஐந்து ஆண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க முடியாது. ஆசிரியர்கள் தகுதியானவர்களாக இருக்க வேண்டும். கடந்த 1991&92ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்தப் பள்ளிகளில் படித்தவர்கள் பலர் ஆசிரியர்களாக வந்துள்ளனர். 685 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் ஒவ்வொரு ஆண்டும் 73 ஆயிரம் பேர் படிப்பு முடித்து வெளியே வருகின்றனர்.அவர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களில் தரமானவர்களை தேர்வு செய்ய தேர்வு கட்டாயம். பட்டம் இருந்தால் மட்டுமே ஒருவரை வேலைக்கு தேர்வு செய்ய முடியாது. அந்த வேலைக்கான தகுதியும் அவருக்கு இருக்க வேண்டும். எனவே, ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
Special Recruitment of Computer Instructor 2006 - 07 -
ReplyDeleteRe-examination Individual Query
Sir any news regarding maths with ca. Can we get equivalency certificat? We havepassed but due to this reason we are quit. .
ReplyDeleteதகுதி தேர்வை ரத்து செய்யக்கோரி
ReplyDeleteஏப்ரல் 4ம் தேதி டெல்லியில் மறியல்
ஈரோடு : நாடு முழுவதும் ஆசிரியர் தகுதிதேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் பாராளுமன்றம் முன்பு ஏப்ரல் 4ம் தேதி மறியலில் ஈடுபட அகில இந்திய ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது. மறியலில் தமிழகத்தில் இருந்து 10 ஆயிரம் ஆசிரியர்கள் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிமாநில துணைத்தலைவர் முத்துராமசாமி கூறியதாவது: பீகார், உத்தரபிரதேசம், சட்டிஸ்கர், ஜார்கண்ட் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் 9ம் வகுப்பு மற்றும் எஸ்எஸ்எல்சி., முடித்தவர்கள் ஒப்பந்த , பாரா ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இதுபோன்ற ஆசிரியர்களுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கட்டாயம்தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு சரியானது தான். அதன் அடிப்படையில் தான் அந்தந்த மாநிலஅரசுகள் ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தி வருகிறது.
தமிழகத்தை பொருத்தவரை ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது தேவையில்லாதது. ஏனெனில், தமிழகத்திலுள்ள அனைத்து அரசுமற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதிக்கான பட்டம் மற்றும் பட்டயப்படிப்பை முடித்தவர்களே ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு என்பது இட ஒதுக்கீடு கொள்கைகளுக்கு முரண்பாடானது. தமிழகம் போன்ற மாநிலங்களில் ஆசிரியர் தகுதி தேர்வை கட்டாயம் ரத்து செய்ய வேண்டும்.
நாடு முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வைரத்து செய்ய வேண்டும், 6வது ஊதியக்குழு பரிந்துரைகளை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களையும் வலியுறுத்தி ஏப்ரல் மாதம் 4ம் தேதி டெல்லியில் பாராளுமன்றம் முன் எங்களது தலைமை இயக்கமான அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் அகில இந்திய பொது செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் மறியல் போராட்டம் நடக்கிறது. மறியல் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 10 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு முத்துராமசாமி தெரிவித்தார்.
MURUGAVEL sir புதிதாக பணியில் சேர்ந்த, ஆசிரியர்களில், இடைநிலை ஆசிரியர்களுக்கு, டிசம்பர் மாத சம்பளம் வழங்கப் படவில்லை. சம்பளம் வழங்க கால தாமதம் ஏன்...
ReplyDelete6,000 புதிய ஆசிரியர்களுக்கு டிசம்பர் சும்பளம் வழங்கப்படவில்லை - Dinamalar
ReplyDeleteபுதிதாக பணியில் சேர்ந்த, 21 ஆயிரம் ஆசிரியர்களில், 6,000 ஆசிரியர்களுக்கு, டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை. மத்திய இடைநிலைக் கல்வி திட்ட நிதி - ஆர்.எம்.எஸ்.ஏ.,வில் இருந்து, சம்பளம் வழங்க வேண்டியிருப்பதால், கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆண்டு, டிச., 13ம் தேதி, இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் என, 21 ஆயிரம் ஆசிரியர்கள்,புதிதாக நியமிக்கப்பட்டனர். இவர்களில், 6,000 பட்டதாரி ஆசிரியர்தவிர, மற்ற அனைவருக்கும், டிசம்பர் மாதத்தில், பாதி நாள் சம்பளம் வழங்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும், 6,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும், சம்பளம் வழங்கப்படவில்லை என, ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி வட்டாரத்தினர் கூறுகையில்,"இவர்களுக்கு சம்பளம் வழங்க, மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். இதனால், சற்று கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாளில், அனைவருக்கும், சம்பளம்வழங்கப்படும்" என்றனர்.
ஆசிரியர்கள் நியமனத்திற்கு அடுத்த பட்டியலில் 15,000 பேர்
ReplyDeleteஇந்த ஆண்டு, ஜூன் மாதம், பள்ளி துவங்குவதற்கு முன், மூன்றாவது, டி.இ.டி., தேர்வை நடத்தி, அதன் வழியாக,15 ஆயிரம் ஆசிரியர்களை,
புதிதாக தேர்வு செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
இவர்கள் அனைவரும், ஜூன் மாதம், பள்ளி துவங்கும் போது, பணியில் சேர வழி செய்யப்படும் என, கூறப்படுகிறது.
கட்டாய கல்விச் சட்டத்தின் படி, எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரிஆசிரியர், ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இதன்படி, கடந்த ஆண்டு, ஜூலை,12ல் நடந்த முதல், டி.இ.டி., தேர்வை, எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதிய போதும், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.மொத்த தேர்வர்களில், 0.33 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றதால், தோல்வி அடைந்தவர்களுக்குமீண்டும் வாய்ப்பு அளிக்கும் வகையில், கடந்த ஆண்டு, அக்., 14ல், இரண்டாவது, டி.இ.டி., தேர்வு நடந்தது.முதல் தேர்வு கேள்வித்தாள் கடினமாக அமைந்ததும், தேர்வுக்கு, ஒன்றரை மணி நேரம் மட்டுமே வழங்கியதும், தேர்ச்சி சரிவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்பட்டது.இதனால், இரண்டாவது தேர்வுக்கு, கேள்வித்தாள் கடினத்தை சற்று தளர்த்தியதுடன், தேர்வு நேரத்தை, ஒன்றரை மணியிலிருந்து, மூன்று மணி நேரமாக உயர்த்தப்பட்டது.இதன் காரணமாக, இரண்டாவது தேர்வில், 19 ஆயிரம் பேர் (3 சதவீதம்), தேர்ச்சி பெற்றனர். இரு தேர்வுகளிலும் தேர்வு பெற்றவர்களுக்கு, கடந்த டிசம்பரில், பணி நியமனம் வழங்கப்பட்டது.இந்நிலையில், மூன்றாவது, டி.இ.டி., தேர்வை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில், டி.ஆர்.பி., இறங்கியுள்ளது.
ஏற்கனவே நடந்த டி.இ.டி., தேர்வுகளில்,இன்னும், 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.இந்த ஆண்டு, மே இறுதியில் ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்தால், 15 முதல், 17 ஆயிரம் ஆசிரியர்கள் வரை, புதிதாக தேர்வு செய்ய வேண்டி இருக்கும்.முதலில், ஜூன் மாதத்திற்குப் பின், மூன்றாவது, டி.இ.டி., தேர்வு நடக்கும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், ஜூன்மாதத்திற்குப் பின் துவக்கினால், இறுதிக்கட்ட தேர்வு முடிய, இரண்டு, மூன்று மாதங்கள் கரைந்து விடும் என, கல்வித் துறை கருதுகிறது.
புதிய ஆசிரியர்கள், ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கியதும், பணியில் சேர்வதற்கு ஏற்ப, தேர்வு அட்டவணையை தயாரித்து முடிக்க வேண்டும் என, டி.ஆர்.பி.,யிடம், கல்வித் துறை உயர் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.எனவே, அடுத்த, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பை, விரைவில் எதிர்பார்க்கலாம். பள்ளி பொதுத் தேர்வுகள், ஏப்., 10ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, ஏப்ரல் இறுதியில் தேர்வை நடத்தி, மே மாதத்திற்குள், அனைத்துப் பணிகளும் முடிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
OK SIR SECOND GRADE VAGANCY YEVVALAVU SIR IRUKKU?
ReplyDelete3RD TET QUESTION YEPPADI IRUKKUM MURUGAVEL SIR? PLZ REPLY
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அடுத்து நடைபெற உள்ள நியமனங்களின் விவரம்:
ReplyDeleteஇடைநிலை ஆசிரியர்கள் - 2,210
பட்டதாரி ஆசிரியர்கள் - 12,532
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் - 2,600
(மேற்காணும் எண்ணிக்கைகள் கூடுதல் பெற வாய்ப்புண்டு)
ஆசிரியர் நியமன தகுதி மதிப்பெண்: தளர்த்த கோரிய மனுக்கள் தள்ளுபடி
ReplyDeleteசென்னை: ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதி தேர்வில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்தக் கோரிய மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
ஆசிரியர் பணி நியமனத்துக்கான, தகுதி தேர்வு, கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்தது.தகுதி மதிப்பெண், 60 சதவீதம் என, நிர்ணயிக்கப்பட்டது. இதில், கலந்து கொண்டோர், சொற்ப அளவிலே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, கடந்த ஆண்டு, அக்டோபரில், மீண்டும் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறாத, 15 பேர், ஐகோர்ட்டில், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்தி, சலுகை காட்டுமாறு, கல்வித் துறைக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும் என, கோரப்பட்டது.
இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி, சந்துரு பிறப்பித்த உத்தரவு:முதலாவதாகநடந்த தகுதி தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைவாக இருந்ததால், இரண்டாவதாக, தகுதி தேர்வை, அரசு நடத்தியது.
இரண்டாவது தேர்விலும், மனுதாரர்கள் தேர்ச்சி பெறவில்லை. மற்ற மாநிலங்களில், தகுதி மதிப்பெண்ணில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதால், இங்கும் வழங்க வேண்டும் என, கோருகின்றனர்.
மற்ற மாநிலங்களில் சலுகைகள் வழங்குவது, தமிழகத்தை கட்டுப்படுத்தாது. குழந்தைகளுக்கு, தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான், தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்களின் கல்வி தரத்தில், எந்த சமரசத்துக்கும் இடமில்லை என, அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது.நிர்ணயிக்கப்பட்ட தகுதியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்; அதை மீறி நடக்கும் நியமனங்கள் செல்லாது என, ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
எனவே, மனுதாரர்களின் கோரிக்கையை, பரிசீலிக்க விரும்பவில்லை. கல்வி தரத்தை குறைக்கும் வகையில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்துவதற்கு, அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது. மனுக்கள், தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி, சந்துரு உத்தரவிட்டுள்ளார்.
அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,063 பேராசிரியர்கள் நியமனம்: முறைகேடுகளைத் தடுக்க போட்டித்தேர்வு வேண்டும்:விரிவுரையாளர்கள் கோரிக்கை
ReplyDeleteஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,063 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க போட்டித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றுவிரிவுரையாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர்வலியுறுத்தினர்.
இப்போதுள்ள முறையின் படி நேர்முகத் தேர்வுக்கும், அனுபவத்துக்கும் அதிக மதிப்பெண் இருப்பதால் தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
புதிய முறையில் தேசிய விரிவுரையாளர் தகுதித் தேர்வு (நெட்), மாநில விரிவுரையாளர்தகுதித் தேர்வு (செட்) ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் மேலும் கோரிக்கை விடுத்தனர்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,063 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் விரைவில் தொடங்க நிலையில், இந்தத் தேர்வு முறை மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அதிகமான காலிப்பணியிடங்கள் இருந்ததால் அந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய தேர்வு முறையை தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் அரசுக்குப் பரிந்துரை செய்தது.
அதன்படி, பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக 15மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்ணும், பி.எச்டி பட்டத்துக்கு அதிகபட்சமாக 9 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.
பி.எச்டி. பட்டம் பெறாமல் எம்.பில். பட்டத்துடன் தேசிய விரிவுரையாளர் தகுதித் தேர்வு, மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் 6 மதிப்பெண்ணும், தகுதித் தேர்வுகளில் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தால் 3 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.
அரசுக் கல்லூரிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பும் நோக்கத்தில் கடந்த ஆட்சியில் தயாரிக்கப்பட்ட இந்தத் தேர்வு முறையால் தரமான ஆசிரியர்கள் அதிகம் தேர்வாகவில்லை என தமிழ்நாடு அரசுக் கல்லூரிஆசிரியர் கழகத்தின் முன்னாள் தலைவர் கோ.க.பழனிகூறினார்.
இந்த மதிப்பெண் முறையால் நெட், ஸ்லெட் (செட்) தேர்வுகளில் தகுதி பெற்றவர்களும் அதிகமான அளவில் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தேர்வு பெறவில்லை. நேர்முகத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தும் அனுபவச் சான்றிதழ் போன்றவற்றால் நிறைய பேர் தேர்வானதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சுயநிதி கல்லூரிகள் அதிகளவில் பணம் பெற்றுக்கொண்டு போலியான அனுபவச் சான்றிதழ்களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், புத்தகம் வெளியிட்டிருந்தால் மதிப்பெண் என்ற பிரிவுஇருந்தது. இதற்காகவும் நிறைய பேர் பணம் செலுத்தி புத்தகம் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த காரணங்களால் புதிய மதிப்பெண் முறையை பரிந்துரைத்த தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகமே அதை எடுத்துவிட்டு போட்டித் தேர்வு நடத்துமாறு அரசுக்குப் பரிந்துரை வழங்கியுள்ளது.
ஆனால், அந்தப் பரிந்துரை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என்று விரிவுரையாளர்கள் புகார் தெரிவித்தனர்.
இதில் போட்டித் தேர்வு மதிப்பெண்ணோடு, அனுபவத்துக்கு 2 மதிப்பெண்ணும், உயர் கல்விக்கு 8 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது. எந்தவித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் விரிவுரையாளர்களை நியமிக்க இதுவே சிறந்த வழிமுறை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2009-10-ம் ஆண்டில் 1,022 விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக ஊழல் கண்காணிப்புத் துறை விசாரணை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
நெட், செட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள பி.எச்டி. மாணவரான வேல்முருகன் கூறும்போது,"இப்போதுள்ள தேர்வு முறையில் இளைஞர்களும், தகுதியானவர்களும் வருவதற்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளன. தகுதித் தேர்வுகளுக்கும், இதில் பெறும் மதிப்பெண்ணுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றார்.
நியாயமாக தேர்வு செய்தால்போதும்: ஏற்கெனவேநெட், செட் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு வைக்கக் கூடாது. இப்போதுள்ள மதிப்பெண் முறைகளைப் பின்பற்றி, விரிவுரையாளர் நியமனத்தை நேர்மையாக நடத்த வேண்டும்என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.பிச்சாண்டி கூறினார்.
நெட், செட் தேர்வுகளில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள் தேர்வு பெறுவதால் மற்றுமொரு தேர்வை வைத்தால் தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் கிடைக்கமாட்டார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 21 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி,முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டபோதும் முறைகேடு புகார்கள் எழவில்லை. ஆனால், இப்போதுள்ள முறையில் 1,063உதவிப் பேராசிரியர்கள் நியமனம் நடைபெற்றால் முறைகேடுகள் நடைபெறும் என்கிறஅச்சம் தகுதியானவர்களிடம் ஏற்பட்டுள்ளது.
முதலில் வேலை, பின்னர் தகுதித்தேர்வு பட்டதாரி ஆசிரியர்கள் எம்.எல்.ஏ ஆபீசில் மனு
ReplyDeleteதமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு வந்தனர். அங்குள்ள ஊழியரிடம் மனு அளித்தனர். அதில், கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகள், ஆசிரியர் பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கட் டாய கல்வி உரி மைச் சட்டத்தில் தகு தித் தேர்வு தேர்ச்சி பெற ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகள் அனுமதியளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பதிவுமூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்து விட்டு, ஐந்து ஆண்டுகளில் அவர் களை தகுதிப்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்க வேண் டும். இதற்கு முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சங்க தலைவர் சுந்தர் கூறுகையில், கட்டாய கல்வி உரிமை சட்டப்படியான தகுதித் தேர் வை நாங்கள் எதிர்க்கவில்லை. அதே நேரத்தில், பதிவு மூப்பு அடிப்படையில் காத்திருப்போருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். பணி நியமனம் பெற்ற 5 ஆண்டுகளில் தகுதித்தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு, பணி நியமனம் கிடைக் கும் என்று காத்திருக்கும் பல்லாயிரம் பேருக்கு நம்பிக்கை ஏற்படும். இதற்காக மனு கொடுத்துள்ளோம் என்றார்.
Ovvoru communitykum ulla salugaigal patri pothu arivu ulagam puthagathil anaivarum padiungal...
ReplyDelete3rd tet exam april nnu confirm agiticha? murugavel sir
ReplyDeleteindha time online application a illa vera yeppadi sir ? plz reply for me murugavel sir
my mail id is sugusilentkiller@gmail.com
plz reply murugavel sir
பொதுவேலைநிறுத்தம்: 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பர்
ReplyDeleteவரும் 20, 21-ம் தேதி நடைபெறும் பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தில் 50,000 ஆசிரியர்கள் பங்கேற்பர் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச்செயலர் முருக.செல்வராசன் தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்பின் அகில இந்திய வேலை நிறுத்த ஆயத்த மாநாடு ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் சங்க மாநிலப்பொதுச்செயலர் கூறியது: வரும்20,21 ஆகிய தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் 2 நாள் பொது வேலை நிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் 20,21ம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தில் தமிழகம் முழுவதும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முழு அளவில் பங்கேற்க உள்ளது. 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.
பொது வேலை நிறுத்தத்தின் போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும்,புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தரவும், மக்கள் விரோத கொள்கைகளை திரும்ப பெறவும், தன் பங்கேற்புத்திட்டத்தைக் கைவிட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை தொடரவும் வலியுறுத்தப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வை முற்றிலும் ரத்து செய்து வேலைவாய்ப்பு பதிவு மூப்பின்அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மாத சந்தா தொகையை ரூ.50 ஆக குறைக்க வேண்டும் என்றார்.
மாநிலச் செயலாளர் வின்சென்ட், மாவட்டப் பொருளாளர் தமிழ்செழியன், மாவட்ட துணைச் செயலாளர் தாமஸ் ஆண்டனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
i want to evs study meterials sir
ReplyDeletei want to evs study meterials sir
ReplyDeleteHI ANY FRIENDS appointed TEACHERS ON -dec-2011 and CV ON 15/11/2010 AND 16/11 2010. KINDLY CLARIFY ME WE HAVE TO WRITE TET OR NOT .
ReplyDeleteNOW SOME BODY SAYS NEW JUDGEMENT LASTWEEK DECLARED
THOSE WHO DONE CV ON 2010 (MORE THAN 30,000 TEACHERS) NO NEED TO WRITE TET..
IS IT TRUE ?
PLS CONTACT ME 9962228284 OR MY MAIL aimcentum2008@gmail.com.