தங்கள் நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமா?
கருத்துரு தயாரிக்கும் போது சில முக்கிய குறிப்புகளை மனதில் கொள்ள வேண்டும்.
1. 5 கிலோமீட்டர் சுற்றளவில் உயர்நிலை பள்ளிவசதி இல்லாத குடியிருப்புகள் / நடுநிலைப்பள்ளிகள். ( பள்ளிக்கு மட்டும் அல்லாமல் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெரும்பான்மையினர் உள்ள குடியிருப்புகளுக்கும் அருகில் உள்ள உயர்நிலை பள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு 5 கிலோமீட்டருக்கு மேல் உள்ளது என்றாலும் தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம் ).
2. SC / ST / சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் இடங்கள்.
3. 8 ஆம் வகுப்பில் ஊட்டு பள்ளி மாணவர் எண்ணிக்கையுடன் 80 மாணவர்களுக்கு குறையாமல் சேர வாய்ப்புள்ள நடுநிலை பள்ளிகள்.
4. போக்குவரத்து வசதியற்ற இயற்கை / செயற்கை தடை உள்ள பகுதிகள்.
( சென்ற இரு ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் தொடர்பான அரசாணையின் படி )
மேலே கூறிய காரணங்களில் தங்கள் பள்ளிக்கு பொருத்தமான காரணங்களை சேர்த்து கருத்துரு தயாரிக்க வேண்டும்.
குறிப்பாக கருத்துருவில் தலைமை ஆசிரியர் விண்ணப்பம், PTA, VEC, பொதுமக்கள் விண்ணப்பம், உதவி தொடக்க கல்வி அலுவலர் பரிந்துரை போன்ற அனைத்திலும் மேலே கூறிய காரணங்களை தெளிவாக Bold Letters இல் குறிக்கவும்.
உங்கள் பார்வைக்கு சென்ற இரு கல்வி ஆண்டுகளில் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் அரசானை.
ஆசிரியர் பணிநியமனங்கள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் பள்ளி கல்வித்துறை அடுத்ததாக பள்ளிகள் தரம் உயர்த்தல் தொடர்பான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. எனவே கருத்துரு அனுப்ப இதுவே சரியான நேரம். காலம் தாழ்த்த வேண்டாம்.
sir,
ReplyDeleteArumaiyana thahaval.Nantri.
S.Senthilasiriyar
sir, please post upgrading of schools middle to high in word format
ReplyDelete