Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வாகாதோர் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு- Dinamalar


       ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில், தகுதியில்லாத ஆசிரியர்களை நீக்கி, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

      அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்காக, தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில், இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி என, 18 ஆயிரம் பேர் தேர்வு பெற்றனர். பணி நியமனத்திற்கான சான்று சரிபார்ப்பு பணியின் போது, தகுதி இல்லாத பலர், தேர்வு செய்யப்பட்டனர்; இது குறித்து அரசுக்கு, புகார் சென்றது. இவர்களை தகுதி பட்டியலில் இருந்து நீக்க, கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் தேர்வு செய்யப்படாதோர் பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
       கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அவசர கோலத்தில் சான்றுகள் சரிபார்க்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில், உரிய சான்றுகள் இன்றி பங்கேற்றுள்ளனர். இது போன்றவர்களை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது", என்றார்.
 
( தற்சமயம் வரை அத்தகைய எந்த பட்டியலும் வெளியாகவில்லை, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம் )




1 Comments:

  1. கல்வித்துறை பரபரப்பு உத்தரவு
    தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம்கட் -Dinakaran

    சிவகங்கை: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும், தொடக்கக்கல்வி துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிகளுக்கு கடந்த ஆண்டுக்கான இறுதிகற்பிப்பு மானியம் (ஊதியம்) மற்றும் பராமரிப்பு மானியம் கணக்கிட்டு வழங்கப்படும். அதன்படி 2012ம் ஆண்டிற்கான கணக்கிடும் பணி உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் வருகிற 21ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனுப்பிய சுற்றறிக்கை: அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மானியம் வழங்குவது மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களின் மிக முக்கிய பணியாகும். இறுதி கற்பிப்பு மானி யம் கணக்கிடும்போது, ஆய்வு செய்யப்படும் பள்ளி வேலை நாட்கள் 220 பூர்த்தி செய்திருக்க வேண்டும். குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
    தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் நியமிக்கப்பட்ட தலைமையாசிரியர் 5 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நடுநிலைப்பள்ளி முழு நிதியுதவியுடன் கூடிய முழுமை பெற்றதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 100 மாணவர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே கைத்தொழில் ஆசிரியர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். 2010ஆக.23க்கு பிறகு ஏற்பட்ட காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று நியமனம் பெற்றவர்களுக்கே மானியம் விடுவித்தல் வேண்டும். உயர்கல்விக்கானஊக்க ஊதியம் தற்காலிக பட்டச்சான்றின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், 2 ஆண்டுக்குள் அசல் பட்டச்சான்றினை முன்னிலைப்படுத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால் வழங்கப்பட்ட ஊதியத்தை பிடித்தம் செய்திட வேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் ஊதியம் குறித்து மாநிலக் கணக்காயரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். மாநிலக் கணக்காயர் மற்றும் துறை அதிகாரிகள் தணிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யவில்லை என்றால் இறுதி கற்பிப்பு மானியத்தை பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் அங்கீகாரம் ஆணை பெற்ற பின்னரே கற்பித்தல் மானியம் குறித்த ஆணை பிறப்பித்தல் வேண்டும். சுயநிலைப்பிரிவு, சுயநிதிப் பள்ளிகளுக்கு மானியம் ஏதும் வழங்குதல் கூடாது. பள்ளி செயலர் நியமனங்கள் 3 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு மட்டும் மானியம் கணக்கிடுதல் வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive