Home »
» ஓய்வூதியதாரர்கள் "ஆதார்' விவரங்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்
ஓய்வூதியதாரர்கள்
"ஆதார்' அடையாள அட்டை விவரங்களை சமர்ப்பிக்க வேண்டியதை தொழிலாளர் வருங்கால
வைப்புநிதி அமைப்பு (இ.பி.எஃப்.ஓ.) கட்டாயமாக்கியுள்ளது.
இதுகுறித்து
இ.பி.எஃப்.ஓ. வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியில்:ஓய்வூதியதாரர்களின்
விவரங்களை அறிந்து, அவர்களுக்கான சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில்
அனைவரின் "ஆதார்' அடையாள அட்டை விவரங்களை பெற முடிவு
செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் மார்ச் 1-ம் தேதிக்குப் பிறகு
இ.பி.எஃப்.ஓ. அமைப்பில் சேரும் உறுப்பினர்கள் "ஆதார்' அடையாள எண்ணை
குறிப்பிட வேண்டியது கட்டாயமாகும்.இதுபோல் அனைத்து ஓய்வூதியதாரர்களும்,
ஓய்வூதியம் பெறும் வங்கியில் இந்திய தனி அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ)
சார்பில் வழங்கப்பட்ட ஆதார் கடிதம், ஓய்வூதிய உத்தரவின் (பிபிஒ) முதல்
பக்கம், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் ஆகியவற்றை சமர்ப்பிக்க
வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...