சென்னையில் நடக்க இருக்கும், ஓபன் சதுரங்க போட்டிக்கு விண்ணப்பிக்க, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள, "தி சில்ரன்ஸ் கிளப்&' சார்பில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கான, ஓபன் சதுரங்க போட்டி, மயிலாப்பூர் திருவேங்கட முதலி அரங்கில் நடக்கிறது. வரும் பிப். 2, 3 தேதிகளில், போட்டி நடக்க உள்ளது.
தகுதியுள்ள மாணவ, மாணவியர், குழந்தைகள் மனமகிழ் மன்ற செயலரின், 99405 57388 என்ற அலைபேசி எண்ணில் தொடர்புக் கொண்டு, விவரங்களை அறியலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...