Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதிய கல்வி ஆண்டில் ஆசிரியர் காலி பணி இடங்கள் பதவி உயர்வு, நேரடி நியமனம்

        புதிய கல்வி ஆண்டில் ஏற்படும் ஆசிரியர் காலி பணி இடங்களை சிறப்பு பதவி உயர்வு, நேரடி நியமனம் மூலம் நிரப்ப பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.         2013,14ம் கல்வி ஆண்டில் பட்டதாரி ஆசிரியர்கள், சிறுபான்மை மொழி, இடைநிலை ஆசிரியர் மற்றும் சிறப்பாசிரியர்களின் காலி பணி இடங்கள் உருவாகின்றன. இவற்றை நிரப்ப பதவி உயர்வு மூலமாகவும், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து தேர்வாளர் பட்டியல் பெற்று நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்பப்பட உள்ளன.

          இதற்காக உத்தேச பணியிட மதிப்பு பட்டியலை அரசின் பார்வைக்கு அனுப்புவதற்காக அந்தந்த மாவட்டங்களில் ஏற்படும் காலி பணி இடங்கள் குறித்த முழுவிவரங்களை வரும் 21ம் தேதிக்குள் தயாரித்து இணை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். விவரங்கள் சரியாக இருக்க வேண்டும் எனவும் தவறாக இருந்தால் அதற்கான பொறுப்பை முதன்மைக் கல்வி அலுவலரே ஏற்க நேரிடும் எனவும், சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளை பொருத்தவரை சம்பந்தப்பட்ட மாநகராட்சி கல்வி அலுவலர்கள் விவரங்களை சமர்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

          காலி பணி இடவிவரத்தை 1.1.2013ல் உள்ளவாறு ஆசிரியரின்றி காலியாக உள்ள பணி இட விவரம் (வயது முதிர்வு ஓய்வு நீங்கலாக) படிவம் ஒன்றிலும், 1.6.2012க்கு பின்னர் ஓய்வு பெற்று மற்றும் 31.5.2013 முடிய மறு நியமன அடிப்படையில் பணிபுரிந்து ஓய்வு பெறுபவர்கள் சார்பில் விவரம் படிவம் இரண்டிலும் தயாரித்து அனுப்ப வேண்டும் எனவும் பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) இதர பட்டதாரி ஆசிரியர்கள் (பாட வாரியாக) சிறுபான்மை மொழிப்பாட ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர் மற்றும் இதர சிறப்பாசிரியர்கள் பணியிடங்களுக்கு தனித்தனியாக விவரத்தை அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

          இடைநிலை ஆசிரியர் காலிப் பணி இடங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு பள்ளியிலும் பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கையின் அடிப்படை யில் அப்பள்ளியில் ஏற்கனவே பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை பாடவாரியாக கணக்கிட்டு காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணி இடங் களை எந்த பாட ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பினால் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் மேம்படும் என்பதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு பாடவாரியாக நிரப்பிட உரிய கருத்துருக்களை தொகுத்து அனுப்ப வேண்டும்.




2 Comments:

  1. part time special teacher promotion to special teacher -2013 januvary

    ReplyDelete
    Replies
    1. TIRUVANNAMALAI DIST VEMPAKKAM BRC MISUSES AT PART TIME SPECIAL TEACHER SALARY GIVES AFTER 2 0R 3 MONTHS

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive