மாத சம்பளம் பெறுபவர்கள் வருமான வரியை, வருமான வரிச் சட்டம் 80சி, 80டி பிரிவுகளில் வழங்கப்படும் விலக்குகளை எப்படிப் பெறலாம்?
மாத சம்பளம் பெறுபவர்கள் சரியாக திட்டமிட்டால் வருமான வரி செலுத்துவதை மிச்சப்படுத்தலாம்.

பிரிவு 80 சி: இந்த பிரிவின் கீழ் நீங்கள் தேசிய சேமிப்பு பத்திரம்
, வங்கி வைப்பு நிதி, தொழிலாளர் வருங்கால சேம நல நிதி, பொது சேம நல நிதி, பரஸ்பர நிதிகள் வெளியிடும் பங்கு சார்ந்த சேமிப்பு திட்டங்கள்,காப்பீடுக்கு
செலுத்தும் பிரிமியம் மற்றும் வருங்கால ஓய்வுதியம் ஆகியவைகளுக்கு
செலுத்தும் பிரிமியம் ஆகியவைகளில் செய்யும் முதலீடுகளுக்கு வருமான வரி
விலக்கு பெறலாம்.
பிரிவு 80 சிசிசி: 80 சி பிரிவில் அனுமதிக்கப்பட்ட அளவு, காப்பீடு நிறுவனங்களின் ஓய்வுதிய திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரி விலக்கு பெறலாம்.
பிரிவு 80 டி: இந்த பிரிவின் படி கூட்டாக வாழும் ஹிந்து குடும்பத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்கள், வருமான வரி செலுத்துபவர், அவரின் பெற்றோர், மனைவி, குழந்தைகள் ஆகியோருக்கு செய்யப்படும் மருத்துவ காப்பீடு திட்டங்களில் செலுத்தப்படும் பிரிமியத்திற்கு வருமான வரி விலக்கு பெறலாம். இதன் படி வருமான வரி செலுத்த வேண்டிய வருவாயில் அதிகபட்சமாக ரூ.15,000 வரை வரி விலக்கு பெறலாம். மூத்த குடிமக்கள் எனில் ரூ.20 ஆயிரம் வரை வருமான வரி விலக்கு பெறலாம்.
பிரிவு 80 டிடி: இந்த பிரிவின் படி வருமான வரி செலுத்துபவரை நம்பியுள்ள உடல் ஊனத்துக்கான மருத்துவ செலவுக்கு வருமான வரி விலக்கு பெறலாம். இதன் படி அதிகபட்சமாக ரூ.50,000க்கு வருமான வரி விலக்கு பெறலாம். அல்லது குணப்படுத்த முடியாத நீண்ட கால நோயாக இருந்தால் ரூ.75 ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம்.
பிரிவு 80 டிடிபி: இந்த பிரிவின் படி சில குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சை கட்டணத்திற்கு வருமான வரி விலக்கு பெறலாம். இதன் படி 65 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான மருத்துவ செலவுக்கு அதிகபட்சமாக ரூ.40,000 வரையிலும், 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.60ஆயிரம் வரையிலும் வருமான வரி விலக்கு பெறலாம்.
பிரிவு 80 இ: இந்த பிரிவின் கீழ் உயர்கல்விக்காக வாங்கும் கடனுக்கு செலுத்தும் வட்டிக்கு வருமான வரி விலக்கு பெறலாம். இந்த வருமான வரி விலக்கு வட்டிக்கு மட்டும் என்பது கவனிக்கத்தக்கது.

பிரிவு 80 ஜி: இந்த
பிரிவின் கீழ் குறிப்பிட்ட அமைப்புகளுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும்
வழங்கப்படும் நன்கொடைக்கு வருமானவரி விலக்கு பெறலாம். நன்கொடை செலுத்திய
மொத்த தொகையில் 50 அல்லது 100 விழுக்காடு வரை வரிவிலக்கு பெறலாம். ஆனால்
இதற்கு வரி விலக்கு பெறும் தொகை, மொத்த வருவாயில் 10 விழுக்காட்டிற்குள்
இருக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...