மதுரையில் ஐந்து மாவட்ட அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி
பிரிவு பள்ளிகளின் அங்கீகாரங்களை புதுப்பித்தல் முகாம், ஓ.சி.பி.எம்.,
பள்ளியில் நேற்று துவங்கியது. பள்ளிக் கல்வி இணை இயக்குனர் ராஜ ராஜேஸ்வரி
இதை பார்வையிட்டார்.
பள்ளிகளின் உட்கட்டமைப்பு, கட்டட வசதி, கழிப்பறை மற்றும்
பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வுகள் நடந்தன. இதன்படி மதுரை, திண்டுக்கல்,
தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விண்ணப்பித்திருந்த, உதவி
பெறும் மற்றும் சுயநிதி பிரிவு பள்ளிகள் நிர்வாகிகளுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டன.
ஆய்வு செய்யப்பட்ட பள்ளிகளின் ஆவணங்கள்
சரிபார்க்கப்பட்டன. இன்றைய (ஜன.,23) முகாமில் அங்கீகாரம் புதுப்பித்ததற்கான
உத்தரவுகளை, இணை இயக்குனர் வழங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...