ஆட்டிசம் பாதித்த குழந்தைகள்,
பிறந்து நான்கு வயது வரை சரியாக பேசாது; பார்வை நேரடியாக இருக்காது;
பிடிவாதமாக இருக்கும்; எந்த பொருளை பார்த்தாலும் உடனே கேட்கும்; சில
குழந்தைகளுக்கு, எச்சில் ஒழுகும்; அதிகம் பாதித்த குழந்தைகள், நிமிர்ந்து
நடப்பதற்கே சிரமப்படும்.
ஆட்டிசம் என்பது நோயல்ல, இதை
சரிசெய்து விடலாம் என்று மூளை நரம்பியல் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மூளை நரம்புகளை தூண்டும் விதமான பயிற்சி
அளித்து, இந்த குழந்தைகளின் குறைகளை சரிசெய்து விடலாம் என்றும்
தெரிவிக்கின்றனர்.
தற்போது, ஆட்டிசம் பாதிப்பு
ஏற்பட்டு, பேச்சு திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்காக, பேச்சுபயிற்சி
கருவியை, சென்னை ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர் அஜித் நாராயணன் கண்டு
பிடித்துள்ளார். இக்கருவி குறித்து, ஆட்டிசம் மற்றும் கற்றலில் குறைபாடுள்ள
குழந்தைகளுக்கான, சிறப்பு பள்ளி -
சங்கல்ப், இயக்குனர் சுலதா அஜித்
கூறியதாவது:
சென்னை அண்ணா நகரில் இயங்கி வரும்,
எங்கள் பள்ளியில், ஆட்டிசம் மற்றும் கற்றலில் குறைபாடுள்ள, 200க்கும்
மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களில், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட
குழந்தைகளுக்கு, சென்னை ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர் அஜித் நாராயணன்
உருவாக்கி உள்ள, "அவாஸ்&' எனும், கருவியைக் கொண்டு, பேச்சு பயிற்சி
அளிக்க உள்ளோம்.
இந்தியளவில், ஸ்பீச் தெரபி
அளிக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ள நிலையில்,
இக்கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஆட்டிசம் குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்த, 19ம் தேதி, சென்னை, சேத்துபட்டு, லேடி ஆண்டாள்
பள்ளியில், கர்நாடக இசைக் கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீயின் இசை நிகழ்ச்சியை நடத்த
உள்ளோம். இவ்வாறு சுலதா அஜித் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...