புதுடில்லி: "பள்ளி பாடங்களில், நன்னெறி புகட்டும் கருத்துகளையும், பெண்களை மதிக்கும் மனப்பான்மையை வளர்க்கும், பாடங்களையும் புகுத்த வேண்டும்" என, மனித வள மேம்பாட்டு துறைக்கு, பிரதமர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சில ஆலோசனைகளை, மனித வள மேம்பாட்டு துறைக்கு, பிரதமர் அலுவலகம் அனுப்பி வைத்துள்ளது. அதில், பள்ளி கல்வியிலேயே, பெண்களை மதிக்கும் மனப்பான்மையை, மாணவர்கள் மத்தியில் வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதற்காக, பாட திட்டங்களில் மாற்றம் செய்து, நன்னெறி கதைகள், அறிவுரைகள், பெண்களை மதிக்கும் மனப்பான்மையை வளர்க்கும் பாடங்களை, பள்ளிப் பாடங்களிலேயே புகுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைகளை, மத்திய மனித வள மேம்பாட்டு துறை, சி.பி.எஸ்.இ., - என்.சி.இ.ஆர்.டி., மற்றும் மாநில கல்வி வாரியங்களுக்கு, கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.
டில்லி சம்பவம் நடப்பதற்கு முன்பே, மாணவர்களுக்கு அறநெறி சார்ந்த, பாடங்களை, ஆசிரியர்கள் கற்று கொடுப்பது எப்படி என்பது குறித்து, கையேடு ஒன்றை, சி.பி.எஸ்.இ., கல்வி நிறுவனம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...