கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை
புரிந்த பெண்களுக்கு, 2012-13ம் ஆண்டுக்கான அவ்வையார் விருது வழங்க
தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த விருதினை பெற விண்ணப்பிப்போர், 18 வயதுக்கு மேல்
இருக்க வேண்டும். சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் பெண் குலத்திற்கு
பெருமை சேர்க்கும் வகையிலான மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம்
போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொடர்ந்து
பணியாற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மூன்று
நகல்களில் சமர்பிக்க வேண்டும். சாதனை புரிந்த விபரம் புத்தக கட்டாக
விண்ணப்பத்தில் பெயர் மற்றும் முகவரி, மொபைல்ஃபோன் எண், பிறந்த தேதி,
கல்வித்தகுதி, தற்போது பணிபுரியும் தொண்டு நிறுவனத்தின் பெயர் மற்றும்
பதவி, ஏற்கனவே விருது பெற்றிருப்பின் விருதின் பெயர், யாரிடம் இருந்து
விருது பெற்றது, வருடம் போன்றவற்றின் விபரம், மகளிர் முன்னேற்றத்திற்காக
பணிபுரிந்த வருடங்கள், பெண்கள் முன்னேற்றத்திற்காக பணிபுரியும் சேவையின்
விபரங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை வரும் 18ம் தேதிக்குள் "மாவட்ட சமூக நல
அலுவலர், கலெக்டர் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி-1" என்ற முகவரிக்கு அனுப்ப
வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...