பாலின விழிப்புணர்வு மற்றும் பெண்களின் மீதான நன்மதிப்பு உள்ளிட்ட அம்சங்கள், விரைவில் பாடத்திட்டத்தில் சேரவுள்ளதாக, மத்திய மனிதவள அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார். தேசியப் பாடத்திட்டத்தில் இந்த அம்சங்களை சேர்ப்பது குறித்து விரைவில் என்.சி.ஆர்.டி., யிடம் பேசவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துவரும் இன்றைய சூழலில், இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.
இதுகுறித்து அமைச்சர் மேலும் கூறியதாவது: பாலின விழிப்புணர்வு மற்றும் பெண்களின் மீதான நன்மதிப்பு ஆகியவற்றைப் பெற்றிராத ஒரு சமூகம், இறந்துபோன சமூகத்திற்கு சமம். நாமெல்லாம் வளர்ந்தபோது, நமது பெற்றோர்களும், ஆசிரியர்களுமே நமக்கு முன்னுதாரணமாக இருந்தார்கள். ஆனால், இன்றைய இளைய சமூகத்தின் மத்தியில் தொலைக்காட்சி, சக மாணவர்கள் மற்றும் தொழில்நுட்பம் போன்றவை ஆதிக்கம் செலுத்துபவையாக உள்ளன.
எனவே, மேற்கூறிய அம்சங்களை, பள்ளி அமைப்பு அல்லது என்.சி.சி போன்ற கல்வி நிறுவன அமைப்புகளில் சேர்ப்பதைப் பற்றி சிந்திக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.
குறைந்தபட்சம், எத்தனை வயது முதல் மேற்கூறிய அம்சங்களை மாணவர்களுக்கு போதிக்க தொடங்கலாம் என்பதை, நிபுணர்கள் கலந்தாலோசித்து முடிவுசெய்ய வேண்டும்.
நாடு முழுவதுமுள்ள பல்கலைகளில், பெண்களுக்கான பாதுகாப்பை வலுவாக்கி, அவர்களின் விடுதிகளில் முழு பாதுகாப்பை உறுதிசெய்து, அதன்மூலம் குற்றங்களை தடுக்க ஆவன செய்யும்படி, யு.ஜி.சி. தலைவரை நான் கேட்டுக் கொண்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...