பாலி யல் புகார் தொடர்பான விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவிகள் 1000 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு அனுமந்த புத்தேரியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 11, 12ம் வகுப்பு அறிவியல் பிரிவில் 300 மாணவிகள் படிக்கின்றனர். வேதியியல், இயற்பியல் பாட ஆசிரியர்கள் நாகராஜ், புகழேந்தி ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடு ப்பதாக புகார் எழுந்தது. கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி தலைமையில் செங்கல் பட்டு கல்வி மாவட்ட அலுவலக அதிகாரிகள் விசாரித்து புகழேந்தி, நாகராஜ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்தனர்.
இந்நிலையில், நேற்று காலை அனைத்து மாணவி களும், ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்தனர். அப்போது, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக வகுப்புகளை புறக்கணித்து 1000 மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், வெளியே வந்த மாணவிகள், ஆசிரியர்கள் பள்ளியின் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிமுக நகர செயலாளர் குமாரசாமி, நகர பொருளாளர் முரளிதரன் உள்ளிட்ட அதிமுகவினரும் இதில் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு டிஎஸ்பி மூவேந்தன், மாவட்ட கல்வி அலுவலர் சகுந்தலா, தாசில்தார் இளங்கோவன் ஆகியோர் வந்து பேசினர். 2 ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட், அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு களை திரும்பப் பெறும்படி மாணவிகள் கோஷமிட்டு, மாவட்ட கல்வி அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பேசியும் அவர்கள் சமாதானம் அடையாததால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, செங்கல்பட்டு எம்எல்ஏ அனகை முருகேசன், ஆர்டிஓ செல்லப்பா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து ஆசிரியர்கள், மாணவிகளிடம் சுமார் 5 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் கொடுத்த மாணவிகள் 7 பேரில் 2 பேரிடம் சமூக நலத்துறை அலுவலர், குழந்தைகள் நல அலுவலர் ஆகியோர் கொண்ட குழு சம்பவம் குறித்து விசாரித்தது. அப்போது, ஒரு ஆசிரியையின் தூண்டுதலின் பேரில், இதுபோன்று புகார் தெரிவித்ததாக அந்த மாணவிகள் அழுது கொண்டே தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தூண்டியதாக கூறப்படும் ஆசிரியை, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்கள், மாணவிகள் என அனைவரிடமும் விசாரணை நடத்தி 3 நாட்களில் அறிக்கை தயாரித்து, மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். பின்னர், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தபின் அனைவரும் கலைந்து சென்றனர்.
Oh! What is happening in Education Department.
ReplyDelete