மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, தேசிய திரைப்பட வளர்ச்சி
கழகத்துடன் இணைந்து, மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை
நடத்துகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு:
சென்னை, பாந்தியன் சாலை, கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் உள்ள மீடியா பயிற்சி
மையத்தில், கை, கால் பாதிக்கப்பட்ட, 50 மாற்றுத்திறனாளிகளுக்கு, ஒரு மாத
இலவச மல்டிமீடியா சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. எட்டாம் வகுப்பு
தேர்ச்சி பெற்ற, 16 முதல், 40 வயதுடையோர், இதில் பயன் பெறலாம்.
உணவு, தங்கும் இடம் ஆகியவற்றுக்கு, மாற்றுத் திறனாளிகளே
பொறுப்பு. விருப்பமுள்ளவர்கள், கல்வித்தகுதி சான்றிதழ் நகல், மாற்றுத்
திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன், அந்தந்த மாவட்ட நல
அலுவலர் முகவரிக்கு தபாலிலோ, நேரிலோ இம்மாதம், 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க
வேண்டும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...