Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"அறிவியல் கல்லூரிகளின் தேவை அதிகரிக்கும்"


        பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மாணவர்களுடன் உரையாடினார்.

கேள்வி: நதிகள் தேசியமயமாதல் குறித்து?
அப்துல்கலாம்: நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் இணைக்கும் போது, பல மடங்கு நீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க முடியும். நாட்டின் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

 கேள்வி: அறிவியல் கல்லூரிகளுக்கு மவுசு குறைந்து வருகிறதே?
அப்துல்கலாம்: சூரியன் எவ்வளவு காலம் பிரகாசிக்கும் என்பதற்கான பதில் போன்றது தான் இதற்கும். அறிவியல் கல்லூரிகளின் தேவை இன்னமும் அதிகமாகவே இருக்கிறது.

கேள்வி: நாட்டின் முதுகெழும்பான விவசாயம் இன்று மிக மோசமான நிலையை அடைந்து, விவசாயி தற்கொலை செய்து கொள்கின்றனரே! இதே நிலை தொடர்ந்தால், வெளிநாடுகளிடம் உணவுக்கும் கையேந்த வேண்டி வருமா?
அப்துல்கலாம்: சில வருந்தத்தக்க நிகழ்வுகள் நடந்தாலும், நாட்டில் விவசாய பொருட்களின் உற்பத்தி, ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. அதே நிலம், அதே தண்ணீர், ஆனால், நவீன தொழில்நுட்பத்தில் உற்பத்தி ஆண்டுக்காண்டு, அதிகரித்து வருவதால், நீங்கள் சொல்லும் நிலைமை வராது.

கேள்வி: 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாகும் என்ற கருத்தில், தற்போது மாற்றம் உள்ளதா?
அப்துல்கலாம்: நாட்டின் பொருளாதார வளர்ச்சி தற்போது, 5.5 சதவிகிதமாக உள்ளது. அடுத்த ஆண்டில், 8 அல்லது, 9 சதவிகிதமாக அதிகரிக்கும். வளர்ந்து வரும் பொருளாதாரமும், இளம் தலைமுறையினரின் அறிவுசார் சொத்தும், இந்தியாவை நிச்சயம், 2020ல் வல்லரசாக்கும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive