மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு முடிவுகள்
இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பாரதியார் பல்கலைக்கழக
வட்டாரங்கள் தெரிவித்தன.
விரிவுரையாளர்களுக்கான மாநில அளவிலான தேர்வை
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. கடந்த அக்டோபர்
7-ம் தேதி விரிவுரையாளர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும்
இந்தத் தேர்வை 51,500 பேர் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் எப்போது
வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்களிடையே எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, பாரதியார் பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறியது:- மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டுவிட்டன. பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளின் படி, மானியக் குழு நேரில் ஆய்வு நடத்தி முடிவை வெளியிட ஒப்புதல் வழங்க வேண்டும். இதற்காக பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை. இந்த நடைமுறை முடிந்ததும் விரைவில் முடிவுகள் வெளியிடப்படும். பெரும்பாலும் இந்த மாத இறுதிக்குள் மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...